வர இருக்கும் கட்டுரை


குளிரூட்டப்பட்ட அறைக்குள் அமர்ந்து கணிப்பொறி உதவியுடன் வாழ்க்கைப்பயணத்தை தொடங்கிவிட்டேன் என்ற எண்ணம் எனக்குள்... ஒருமுறை நான் பனிபுரியும் அலுவலகத்தின் சன்னல் திரையை விளக்கிபார்த்த போது தான் தெரிந்தது... இன்னும் வறுமையின் கரங்களில் சிக்கித்தவிக்கும் மக்கள் வாழும், சாபம் நிறைந்த சமூகத்தில் தான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் என்று!!!

Saturday 31 August 2013




தங்க மீண்கள் திரைவிமர்சனம்

தந்தையின் பாசம் மகளுக்கு மட்டுமே தெரியும் ஒவ்வொரு தந்தையின் பாசத்தையும் சமுதாயம் வேடிக்கை பெம்மையாகவே பார்க்கிறது, என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் ராம்.
பல பெற்றோர்கள் படிக்காவிட்டாலும் தங்கள் குழந்தைகளை நல்ல பள்ளிக்கூடத்தில் படிக்கவைக்க வேண்டும் என்ற ஆசையில் பெற்றோர் தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர் ஆனால் கல்வியறிவும்,பணசெல்வாக்கும் இல்லாத பெற்றோர்களை ஒரு புலுவைப்போலப்பார்க்கும் சமுதாயமும்,கல்விநிறுவனங்களும், அவர்கள் குழந்தைகளை நடத்தும் விதமும் கலங்கவைக்கிறது. மக்கான மாணவர்களைக் கூட மகானாக்கும் வல்லமை படைத்த ஆசிரியர்களே அவர்களை முடக்கி மழுங்கடித்து விடுகிறார்கள் என்பதை அழுத்தமாக சொல்லிஇருக்கும் இயக்குனர் ராமுக்கு ஒரு சல்யூட்.
மாதக்கணக்கில் வராத சம்பளம்,  குழந்தைக்கு பள்ளியில் கட்டணம் செலுத்த
முடியாத சூழ்நிலை, அப்பா செய்யும் உதவியையும் ஏற்றுக் கொள்ள இயலாத நிலையில் ஒரு எதார்த்தமான தந்தையின் நிலையைப் பிரதிபலிக்கிறார் ராம். பள்ளிக் கட்டணச் சுமை ஒரு தந்தையை எந்த அளவுக்கு நசுக்கி வைக்கிறது என்பதற்கு ராமின் கேரக்டர் ஒரு உதாரணமாக அமைந்திருக்கிறது. இது மட்டுமா தொலைக்காட்சிகளும்,விளம்பரங்களும் எந்த அளவிற்க்கு குழந்தைகளை பாதிக்கிறது. அதாவது தனியார் பள்ளியில் படிக்கும் மகளின்  பள்ளிக்கட்டணத்தையே கட்ட இயலாத தந்தையிடம் மகள் ஆசை ஆசையாக ஒரு வோடபோன் நாயைக் கேட்டால் என்னவாகும்என்பதை அழகாகவும் அழுத்தமாகவும் தெரியப்படுத்திஇருக்கிறார்…

மகளுக்காவே, ஆறு மாதம் சம்பளப் பாக்கி என்றாலும் கூட தன் பாத்திரத்திற்கு பாலீஸ் போடும் வேலையைப் பார்க்கும் தந்தை சூழ்நிலை காரணமாக தன் நன்பனை நாட அவரோ சூழ்நிலை புரியாமல் இழுத்தடிப்பதும் அவருக்கும் சரியான பதில் சொல்லி திரும்பும் யதார்த்த தந்தை நம்மனதை நெருடவைக்கிறார், குடும்ப அழுத்தம் கேரளாவுக்கு ஓட செய்கிறது.
மகள் வோடபோன் நாய்க்குட்டி வேண்டும் என்று கேட்கிறாள்,
ரெண்டாயிரத்துக்கு அந்த நாய்க்குட்டி கிடைக்கும் என்று நினைத்த ராம்
அந்த நாயின் விலை 25,000 ரூபாய் என்பதைக் கேட்டதும் பயங்கர அதிர்ச்சியடையும் ராம் கேரக்டரில் ராமுக்கு நிகர் ராம் தான் என்பதை நிருபித்திருக்கார். அந்த அளவுக்கு படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றையும் ரசித்து உருவாக்கியிருக்கிறார்.. 

ஒவ்வொரு காட்சியிலும் தனக்கான நடிப்பை நன்றாக வெளிப்படுத்த முயற்சித்துள்ளது  அந்த குழந்தை (செல்லம்மா). வெகுளித்தனமான அவள் பேச்சும் முகபாவனைகளும் ரசிக்க வைப்பதோடு சிரிக்கவும் வைக்கிறது. அவள் தோழியாக வரும் இன்னொரு குழந்தை அனுபவமுள்ள நடிகர்களை மிஞ்சும் அளவிற்க்கு மிக அற்புதமாக நடித்து ரசிக்க வைக்கிறாள்,  இந்த சிறுமி பேசும் வசனங்கள் எல்லாம் கலகலக்க வைக்கிறது என்றே சொல்லலாம் மகள் ஆசைப்பட்ட ஒன்றை வாங்கிக் கொடுக்கமுடியாமல் போய்விடுமோ என்று தவிக்கிற தவிப்பும் அழுகையும் ராமை ஒரு நிஜ தந்தையாகவே மாற்றியிருக்கிறது.
இவருக்கு மனைவியாக வரும் நடிகையும் ஒரு உன்னதமான தாயாகவே தன் பாத்திரத்தினை பூர்த்தி செய்திருக்கிறார். பின்னணி இசை, ஒளி,ஒலிப்பதிவுகள்   அனைத்துமே ரசிக்க வைத்தாலும் ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடல் எல்லாவற்றுக்கும் ஒரு படி மேல் கண்களை மலைமேல் அவர்களுடன் பயனிக்க வைக்கிறது.
மொத்ததில் ராம் திரைபடத்தினை செதுக்கிருக்கிறார் என்றே சொல்லலாம் தமிழ் M.A பார்த்து கேலி செய்தவார்களுக்கு நெத்தியடியாகவும் சினிமா பிரியர்களுக்கு ஒரு நல்ல விருந்து போல தான் இந்த படம் அமைந்துள்ளது, குத்துப்பாட்டு அனாவசியமான வன்முறை அறுவால்,கத்தி,கம்பு என பார்த்து சலித்துப் போன நேரத்தில் இது போன்ற எதார்த்த சினிமாக்கள் தமிழ் சினிமாவை வேறு பாதையில் கொண்டு செல்ல பக்க பலமாக இருக்கின்றன.

உங்களது பயனம் வெற்றி பெற இந்த வழிப்போக்கனின் வாழ்த்துக்கள்…
இனியன் கோபிநாத்…


சூதுகவ்வும் திரைவிமர்சனம்

இன்று நண்பர்களுடன் சூது கவ்வும் படம் பார்த்தேன். இந்ததிரைப்படத்தின் பெயரே ஒரு த்ரில் கதை என அனைவரையும் நினைக்க வைக்கிறது. ஆனால் ஒரு காதல் கதை.. 4 டூயட்டுகள்.. ஒரு குத்துப் பாட்டு.. ஒரு சோகப் பாட்டு.. 3 பைட்டுகள்
என மொக்கையாக போகும் படங்களுக்கு மத்தியில் பெரிய ரசிப்பே படத்தில் நடித்தவர்களின் கேரக்டர் ஸ்கெட்ச்சுதான்..! நயன்தாராவுக்கு கோவில் கட்டிவிட்டு சென்னைக்கு ஓடி வரும் இளைஞன்.. குளித்து முடித்து பவ்யமாக காலையிலேயே கட்டிங் போட அமரும் இன்னொரு இளைஞன்.. ஐடியில் பணியாற்றியும் வேலை கிடைக்காத தருணத்தில் இவர்களோடு கூட்டணி வைக்கும் ஒரு இளைஞன்.. இவர்களையும் தாண்டி மனதில் நிற்கிறார் விஜய் சேதுபதி முழுகதையையும் சொல்ல முடியாது மொத்ததில் அனைவரின் வயிருகளையும் வழியுடன் கவ்வ வைக்கிறது இந்த சூதுகவ்வும்

அறிமுக இயக்குநர் நலன் குமரசாமியின் குறும்படங்களில் இயக்கத்தைவிடவும் கேரக்டர் ஸ்கெட்ச்சுகளையே அதிகமாக வடிவமைத்திருந்தார்.. அதுபோலவே இதிலும்.. தனது முதல் படத்திலேயே ஹிட்டடித்திருக்கும் இவரது அடுத்தடுத்த படைப்புகளும் ஜெயிக்க எமது வாழ்த்துக்கள்...........


வாழ்வழிக்கும் மெரினா

மெரீனா கடற்கரை. பலருக்கு வாழ்வு கொடுக்கின்றது. இன்று அந்தத் கடற்கரையில் வாழ்வைத் தேடியலையும் இரு பிஞ்சுகளைச் சந்தித்தேன். ஒருவனுக்கு 5 வயது மற்றையவனுக்கு 4 வயதிருக்கும். 5 வயதுக்காரன் அவனிடம் இருக்கும் சுண்டலை வாங்கிக்கொண்டு 10 ரூபா தரும்படி கெஞ்சினான். வாங்கிக் கொண்டேன். 4 வயதுக்காரன் வாங்கிய சுண்டலை தரச் சொல்லி கெஞ்சினான் அதையும் கொடுத்து விட்டேன். வாழ்க்கை கற்றுக் கொள்ள இந்தக் கடற்கரையில் எவ்வளவு வைரங்களை வைத்திருக்கின்றது.. என் அம்மா, அப்பாவை நினைக்க பெருமையாய் இருக்கின்றது
வாழ்க்க அப்படிதான்!!!!!!!!

இனியன்...
பாரபட்சம் எதற்க்கு தமிழக அரசிற்க்கு

சென்னை மாநகரில் உள்ள பல இடங்களின் சுவற்றீல் நமது பாரம்பரிய வரலாற்று ஒவியங்கள் வரையப்பட்டுள்ளன அதனை பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்வு தருகிறது ஆனால் இவை பராமரிப்பில் இல்லை என்பது தான் மன வருத்தம் அதில் ஒன்று தான் இந்த அன்னாநகரில் உள்ள அன்னா கோபுர புங்கா முன்னாள் முதல்வர் திரு.மு.கருனாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இங்கு பெரியவர்களுக்கு பொழுதுபோக்க ஏதும் இல்லாவிட்டாலும். இங்கு உள்ள மரம் செடிகளின் அசைவினால் வரும் ஓசை மனதிட்க்கு மிகவும் அமைதியை தருகிறது எனினும் இங்கு வரையப்பட்டுள்ள ஒவியங்களை பார்க்கும் பொழுது ஏதோ வரலாற்றை சொல்வது போல இருக்கிறது. இதனை பராமரிப்பவர்கள் ஏன் இந்த ஒவியம் சுவற்றில் இருந்து விழும் வரை காத்திருக்க வேண்டும்.

இனியன்