வர இருக்கும் கட்டுரை


குளிரூட்டப்பட்ட அறைக்குள் அமர்ந்து கணிப்பொறி உதவியுடன் வாழ்க்கைப்பயணத்தை தொடங்கிவிட்டேன் என்ற எண்ணம் எனக்குள்... ஒருமுறை நான் பனிபுரியும் அலுவலகத்தின் சன்னல் திரையை விளக்கிபார்த்த போது தான் தெரிந்தது... இன்னும் வறுமையின் கரங்களில் சிக்கித்தவிக்கும் மக்கள் வாழும், சாபம் நிறைந்த சமூகத்தில் தான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் என்று!!!

Monday 30 September 2013



ஓநாய்களும், நரிகளும் 


ஒரு சிறிய காட்டில் வசித்து வந்த புலி ஒன்று தனது இனம் மற்ற மிருகங்கலினால் அழிவதையும், அழிக்கப்படுவதையும், வேட்டையாடப்படுவதையும் மற்ற மிருகங்களிடம் கூனிக்குறுகி தன் வயிற்றுக்காக வேட்டையாடும் உறிமை கூட இல்லாமல் அடிமைப்படுத்தி விடப்பட்டிருப்பதையும் கண்ட அந்த புலி இப்படியே விட்டால் தனது இனம் ஒர் அறிய இனமாக மாற்றப்பட்டுவிடும்  மற்ற மிருகங்களிடம் இருந்து தனித்துருந்தாலும் பரவாயில்லை என்று எண்ணிய அந்த புலி தன் குடும்பம் அழிந்தாலும் தம் இனம் காப்பாற்றப்படவேண்டும் என்பதற்காக, தமக்கென ஒரு அங்கிகாரம் வேண்டும் என்று அனைவரையும் தனக்கே உரிய பாணியில் எதிராலியையும் தம்மினத்தினை சீண்டும் மிருகங்களை வேட்டையாடத்துவங்கியது, காட்டில் இருக்கும் மற்ற மிருகங்களுக்கு புலியின் சூழுறை புரியாமல் அச்சப்பட்டு சிங்கத்திடம் முறையிட்டது  அனைத்து மிருகங்களும், பயந்துபோன சிங்கங்கள் ஒவ்வொருவரும் காட்டை ஆளும் போதும் புலியை சீண்டிப்பார்க்க புலி தனது வழிமையை காட்ட என பல வருடங்கள் இப்படியே ஒடியது, எவ்வளவோ தனது மூலையை கசக்கி புலியிடம் இருந்த புலித்தோல் போர்த்திய நரிகளை எழும்புத்துண்டுகளைக்காட்டியும் மீந்துபோன சதைகளைக்காட்டியும் வளைத்தாலும் சிங்கத்தினால் ஒன்றும் செய்யயிலவில்லை, எல்லா சிங்கங்ளும் கிழட்டு ஓநாய்களைப்போல ஓய்ந்து போனது, தாம் தோற்ப்போனதை சகித்துக்கொல்ல முடியாத நவீன சிங்கம் சமாதானம் என்னும் நயவஞ்சகவளையை விட்டது, அந்த வலையை தகர்த்தேரிந்த புலி ஒருகட்டத்தில் அமைதி திரும்பிவிடும் என்று நம்பியது அது செய்த ஒரே தவறு மற்றவர்களை நம்பாமல் துரோகம் செய்பவர்களையும், தன்னைப்பற்றியும் தன் வீரத்தினைப்பற்றியும் வஞ்சகமாக புகழ்த்து இன்னும் உசுப்பிவிட்ட நரிகளை நம்பி தனக்கு சமமான இருக்கை கொடுத்ததுதான், அந்த புலியின் பலத்தினையும், பலவீனத்தினையும், பின்னிடைவுகளையும் விமர்சிக்க யாரும் இல்லை ஒருபக்கம் நயவஞ்சகம் மறுப்பக்கம் புலியின் கோபத்துக்கு ஆளாகிவடுவோம் என்ற பயம் இது எதிராளியான சிங்கத்திற்க்கு பலமாக அமைந்தது, அதைப்பயபடுத்திய சிங்கம் புலிவேடத்திலிருக்கும் நரிகளை விலைக்கு வாங்கியது, அவைகளைவைத்தே காய்நகர்த்ததுவங்கியது, மேலும் பக்கத்து நாடுகளிடம் பிச்சை எடுத்த சிங்கம் அங்கிருக்கும் ஓநாய்களையும் சேர்த்துக்கொண்டு வெற்றானவீரநடைபோட்டு புலிகள் உறங்கிக்கொண்டிருக்கும் போது தனது முதுகில் குத்தியது, இரத்தவெறிப்பிடித்த இந்திய ஓநாய்களோ எந்தஇனம் என்றே தெரியாமல் அவைகளை சூறையாடியது, இவ்வளவும் அறங்கேற்றிய சிங்கம் தனது சாதுர்யத்தைப்பயன்படுத்தி தன்னிடம் வசைப்பாடிய ஒருநரியை புலிகள் வாழ்ந்த காட்டிற்க்கு ராஜாவாக்கிஇருக்கிறது. மிஞ்சீருக்கு புலிகளும் புலிக்குட்டிகளும் அந்த நரியை தங்கள் பாதுகாப்புக்காகத்தேர்ந்தெடுத்ததென்று நினைத்துக்கொண்டிருக்கிறது சிங்கம் இல்லை தங்களது தலைவன் ஆண்ட மண்னை வேறு எந்த ஓநாய்களுக்கும், சிங்கத்திற்க்கும் இடமில்லை என்பதனை காட்டவே இவ்வாறு செய்திருக்கிறது…    

இனியன்...