வர இருக்கும் கட்டுரை


குளிரூட்டப்பட்ட அறைக்குள் அமர்ந்து கணிப்பொறி உதவியுடன் வாழ்க்கைப்பயணத்தை தொடங்கிவிட்டேன் என்ற எண்ணம் எனக்குள்... ஒருமுறை நான் பனிபுரியும் அலுவலகத்தின் சன்னல் திரையை விளக்கிபார்த்த போது தான் தெரிந்தது... இன்னும் வறுமையின் கரங்களில் சிக்கித்தவிக்கும் மக்கள் வாழும், சாபம் நிறைந்த சமூகத்தில் தான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் என்று!!!

Monday 11 March 2013

         நாடும் நாட்டு மக்களும்



அரசன் எவ்வழியோ மக்களும் அவ்வழி என பழமொழி உண்டு அதுபோல தான் இன்றும் நடந்துகொண்டிருக்கிறது என்பதில் வியப்பொன்றும் இல்லை. நமது இந்தியாவில் எதற்கேடுத்தாலும் அரசாங்கத்தினை குறைக்கூறும் நம் மக்கள் தாங்கள் என்ன தவறு செய்கிறோம் என்பதனை நினைவில் கொல்வதில்லை (அதற்காக நான் அரசாங்கத்திற்கு ஆதரவானவன் என நினைத்துக்கொல்லாதீர்கள்)  மூத்த குடிமக்களான பெரியவர்கள் பார்த்து கற்றுகொடுப்பதைத் தான் இளைய சமுதாயம் கற்றுக்கொள்கிறது. மூத்த சமுதாயமான இவர்களே தவறாக இருந்தால்?

 அட அவர்கள் தான் அப்படி இருக்கிறார்கள் என்றால் நம் இளைஞர்கள் அதற்க்கு மேல் முதலில் நமக்குள் ஓரு கட்டுப்பாடு வேண்டும். என்பதனை புரிந்து பொது இடங்களில் உமிள்வது,சிறுநீர்களிப்பது,சாலைவிதிகளினை மீறுவது, துண்டுபிரசுரங்களை பரக்கவிடுவது தின்பண்டங்களை சாக்கடையில் போடுவது சாலையை கடக்கும் போது ( zebra Crossing ) எதற்காக இருக்கிறது என்பது நம்மில் எத்துனை பேருக்கு தெரியும்? என ஒரு பட்டியல் போடலாம் இப்படி ஒரு கட்டுப்பாடு என்பதே இல்லாமல் இருப்பதால் தான் நம்மை சட்டம் விதிமுறைகள் தண்டனை அபராதம் சிறை என கட்டுக்குள் வைத்துள்ளது அரசாங்கம். இருப்பினும் நாம் அனைத்தையும் மீறிக்கொண்டுதான் இருக்கிறொமே தவிர ஒருபோதும் நாம் அதனை திருத்திக்கொள்வது கிடையாது.
அப்படி ஒருவரை தான் இன்று நாம் சந்தித்தோம் மத்திய இரயில் நிலையம் அருகில் இரண்டு வாழைபழத்தினை சாப்பிட்டுவிட்டு அதன் தோழை நடைமேடையில் எரிந்தார் அப்போது பேருசு அதான் குப்பை தொட்டி இருக்கு அதுல போடலாம்ல என்றார் அதற்கு பதில் எப்படி வந்தது தெரியுமா? ஒன் கடைக்குள்ளயா போட்டேன் ரோட்லதானே வீசினேன் ரோம்ப நாளைக்கு கடை நடத்தமாட்ட என்று சொல்லிவிட்டு சென்றார்.