வர இருக்கும் கட்டுரை


குளிரூட்டப்பட்ட அறைக்குள் அமர்ந்து கணிப்பொறி உதவியுடன் வாழ்க்கைப்பயணத்தை தொடங்கிவிட்டேன் என்ற எண்ணம் எனக்குள்... ஒருமுறை நான் பனிபுரியும் அலுவலகத்தின் சன்னல் திரையை விளக்கிபார்த்த போது தான் தெரிந்தது... இன்னும் வறுமையின் கரங்களில் சிக்கித்தவிக்கும் மக்கள் வாழும், சாபம் நிறைந்த சமூகத்தில் தான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் என்று!!!

Thursday 14 February 2013


”கடலில் பாதை அமைக்கும் ஆமைகளின் அற்புதம்”!


குடியரசுதினத்தன்று பூவுலகின் நண்பர்கள் மற்றும் என்விரோ க்ளப் சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கம் காலை முதலே தண்ணீர் குறித்த அமர்வுகள் சிறு சிறு சலசலப்புடன் அங்கும் இங்குமாய் நகர்ந்து கொண்டிருந்தனர் நம் பார்வையாளர்கள். 
 அனைவரும் அமருங்கள் அடுத்த அமர்வு துவங்குகிறது என்ற குரலுடன் அரங்க மேடையில் இருந்த இருக்கைகள் அகற்றப்பட்டு மின் விளக்குகள் அணைக்கப்படன ஒளித்திரையுடன் அரங்கத்தில் ஏறி நான் ஒரிசா பாலு நீண்ட காலம் ஒரிசா மாநிலத்தில் தங்கியிருந்ததால் இந்தப் பெயர் வந்தது என்றும் ஆமைகள் குறித்து ஆய்வு மேற்கொள்பவர் என்றும் ஒரிசாவில் இருக்கும் போது, ஆமைகள் மீது RFID கருவியை பொருத்தி அவை குறித்து ஆய்வு மேற்கொண்டபோது, ஒரு நாள் ஆமை நீந்தாமல் மிதந்து செல்வதை காண நேரிட்டிருக்கிறது. எப்படி நீந்தாமல் பயணிக்கின்றன என ஆய்ந்தப்போது தான், கடல் நீரோட்டங்களில் அவை செல்லும் போது, நீந்தத் தேவையில்லாமல் இழுத்து செல்லப்படுகின்றன என கண்டுபிடித்திருக்கின்றார். "தரைல இருத்தா நில ஆமை, ஆத்துலயோ, குளத்திலியோ இருந்தா நன்னீர் ஆமை, கடல்ல இருந்தா கடலாமை". சலசல நின்று பார்வையாளர் கவனம் முழுவதும் அவர்பக்கம் திரும்பியது.

        கடலும் ஆறும் கலக்கும் பகுதிகளைத் தேடி வந்து ஆமைகள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யுமாம்.   ஆமை நம்ம ஊரைத் தவிர வேற எங்கெல்லாம் முட்டையிட வரும்?" ஆள் அரவமற்ற மனிதத் தொந்தரவற்ற கடற்கரைப் பகுதியைத் தேர்ந்தெடுத்து முட்டையிடும். நம் மாநிலத்தில் நாகப்பட்டினம், கோடியக்கரை உள்ளிட்ட பகுதியிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் இடிந்த கரை, விஜயதாழை, பெருமணல், பஞ்சல் உள்ளிட்ட பகுதிகளிலும் முட்டையிட வருகின்றன.
              தவிர இவை கூட்டம் கூட்டமாக வந்து முட்டையிடும் இடங்கள் உலகில் ஆறு உள்ளன. அதில் மூன்று இந்தியாவில் ஒரிசா மாநிலத்தில் உள்ள ககிர்மாதா, ருசிகுலா, தேவிஆறு முகத்துவாரம் ஆகும்.இந்தக் கடல் ஆமைகள் பல மைல் தொலைவிலிருந்து வரக்கூடியவை. அவை வந்த தடத்தை கடல் வழியாகப் பின்பற்றிச் சென்றால் புதிய நாடுகளைக் கண்டறிய முடியும். அப்படிப் பின்பற்றிச் சென்று, அந்த நாடுகள் மீது  படையெடுத்துக் கைப்பற்றுவது தமிழ் மன்னர் களின் வழக்கமாக இருந்தது. அதுபோல அந்த நாடுகளுடன் வணிகத் தொடர்பையும் தமிழர்கள் ஏற்படுத்திக் கொண் டார்கள் என்றார்.

           சுமார் முன்னூறு வருடங்கள் வரைகூட வாழும். இந்த ஆமைகள் பயனம் செய்யும் வழிகளை தான் வெளிநாடுகளில் இருந்து வரும்  அனைத்தும் பறவைகளும் பின்பற்றி வருகின்றனவாம்  அதேசமையம் ஒய்வு எடுக்க ஆமையின் மீது அமர்ந்து பயனிக்குமாம். நம் மீணவர்களும் ஆமை செல்லும் பாதையில் தான் மீண் பிடிக்கச்சென்றிருக்கின்றனர். இப்போதும் அதே பாதையினை தான் பயன்படுத்துகின்றனர். 


இன்னும் ஒர் ஆச்சர்யம் முட்டையிடப்பட்ட இடத்திலுள்ள வெப்பநிலை 28 டிகிரி செலிசியசுக்கு அதிகமாக இருந்தால் அம்முட்டைகள் பெண் ஆமையாகவும், அதற்கு குறைவான் வெப்பநிலையில் ஆண் ஆமையாகவும் உருவெடுக்கின்றன.
       
   பொதுவாக ஆமைகள் சுத்தமான கடற்கரைக்குத்தான் செல்லுமாம்    நம்ம மெரினா கடற்கரைக்கு முன்பேல்லாம் கோடிக்கணக்கான ஆமைகள் வந்து சென்றுள்ளன இங்க இத்தனை வருடங்கள் வாழ இந்த ஆமை பல்வேறு வகை எதிரிகளிடமிருந்தும் குறிப்பாக மனிதர்களிடமிருந்தும் தப்பவேண்டி இருக்கும். அசுத்தம் மணித நடமாற்றம் அதிகரிப்பினால் இவை வரத்து குறைந்துவிட்டது. ஆமைகள் இழுது மீண்களை விருப்பி உன்னுமாம் (jelly fish) நாம் வீதியில் விட்டெறியும் பிளாஸ்டிக்கை இழுது மீன் என நினைத்து விழுங்கி விடுவதால் இரைப்பையில் மாட்டி சாவைத் தழுவுகின்றன என்பது மிகவும் வருந்தத்தக்க ஒன்றுதான்.
நன்றி ஒரிசா பாலு அவர்களுக்கு


கோபிநாத்……….