வர இருக்கும் கட்டுரை


குளிரூட்டப்பட்ட அறைக்குள் அமர்ந்து கணிப்பொறி உதவியுடன் வாழ்க்கைப்பயணத்தை தொடங்கிவிட்டேன் என்ற எண்ணம் எனக்குள்... ஒருமுறை நான் பனிபுரியும் அலுவலகத்தின் சன்னல் திரையை விளக்கிபார்த்த போது தான் தெரிந்தது... இன்னும் வறுமையின் கரங்களில் சிக்கித்தவிக்கும் மக்கள் வாழும், சாபம் நிறைந்த சமூகத்தில் தான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் என்று!!!

Monday 18 March 2013



எங்களூக்கும் உணர்வுகள் உண்டு



சென்னை கல்லூரிகளின் தாயகமான சென்னைப்பல்கலைக்கழக மாணவர்கள் சார்பாக இன்று மதியம் 12.00 மணியலவில் பல்கலைகழக வழாகத்தில் தமிழர்களின் பறைஇசை வாத்தியத்துடன் அடையால போராட்டம் நடைபெற்றது. இதில் எந்த வித மாணவஇயக்கத்தின் சார்பும் கட்சிகளின் சார்பும் இன்றி பல மாணவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு ஈழதமிழ் மக்களை பற்றி தெரிந்த வற்றையும் தங்களின் உணர்வுகளையும் பகிர்ந்து கொண்டனர். இதை தொடர்ந்து மாணவர்கள் சார்பாக இலங்கை அரசுக்கு எதிராக இந்திய அரசு . நா. மன்றத்தின் நிறைவேற்றக்கோரி 10 தீர்மானங்களை முன்வைத்தனர்.
தீர்மானங்கள் பின்வருமாறு
1.    இலங்கையில் நடந்தது ஒரு இனப்படுகொலையே, அதை அரங்கேற்றிய ராஜபக்க்ஷேவை இனப்படுகொலையாலனே என்று . நா. அறிவிக்க வேண்டும்.
2.    அந்த இனப்படுகொலையாலனை பன்னாட்டு நீதிமன்றத்தில் விரைவாக விசாரித்து அவனிழைத்த அநீதிக்கெதிராகவும், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஆதரவாகவும் நீதி வழங்க வேண்டும்.
3.    ஈழத் தமிழர் ஒருவரை உறுப்பினராகக் கொண்ட பன்னாட்டு சுதந்திர பொது விசாரணைக்குழு ஒன்றை அமைத்து, ஈழத்தில் பன்னாட்டு போர் குற்ற விசாரணையை மேற்கொள்ளவேண்டும்.
4.    அமெரிக்கத் தீர்மானத்தை தவிர்த்து " தாய் நாடு " என்ற முறையில் இந்தியாவே தமிழ் ஈழத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் கலந்தாலோசித்து, அவர்களது தேவைகள் மற்றும் வேதனைகளை தீர்மானமாக இந்தியா பன்னாட்டு மனித உரிமைகள் மன்றத்தில் முன் மொழிய வேண்டும்.
5.    இலட்ச்சக்கணக்கான ஈழத்தமிழர்களை கொன்று குவித்த, நூற்றுக்கணக்கான இந்திய மீனவர்களை கொன்றொழித்த இலங்கையுடன் இனியும் நட்புறவு கொள்ளக்கூடாது.
6.    தமிழ் ஈழம் மலர வேண்டும், அங்கு எம் தமிழ் மக்கள் சுதந்திரத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ வேண்டும்.
7.    அதற்க்கு ஒரே வழி பொது வாக்கெடுப்பின் மூலம் தமிழ் ஈழத்தை கட்டமைப்பதேயாகும்.
8.    இனியும் ஈழத்தில் மனித உரிமை மீறல்கள் நடைபெறா வண்ணம் அங்கு பன்னாட்டு கண்கானிப்பு மற்றும் பாதுகாப்புக் குழு ஒன்றை அமைக்க வேண்டும்.
9.    ஈழத் தமிழர்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட நிலங்கள் மற்றும் அவர்களது உடைமைகள் அவர்களிடமே ஒப்படைக்க வழிவகை செய்ய வேண்டும்.
10. சிறிதும் மனிதத் தன்மையற்ற இலங்கையை உலக நாடுகளிலிரிந்து நிரந்தரமாக தனிமைப் படுத்த வேண்டும்.

           இதில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் அவர்கள் தானாகவே முன்வந்து போராட்டத்தில் இருக்கும் மாணவர்களை சந்தித்து ஈழமக்களைப்பற்றியும் தங்கள் இயக்கத்தின் பெயர்காரணம் பற்றியும் மாணவர்களிடையே பகிந்துக்கொண்டார்.
            மாலை 5மணியலவில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தினை முடித்துக்கொண்டு களைய சில மாணவர்களின் ஆர்ப்பாட்டம் பட்டினிப்போறாட்டமாக உருவேடுத்தது. 6மணியலவில் பல்கலைக்கழகம் காவல்துறையினரால் சூலப்பட்டது. 7.30மணிவரை நீடித்து உண்ணாவிரதம் இருந்த மாணவர்களில் சிலரை கல்லூரியின் துனைவேந்தர் மற்றும் பொருப்பாளர்கள் அழைத்து அவர்களைக் கண்டித்து நாளை போராட்டத்தின் ஒருங்கினைப்பாலர்களின் மூலம் தங்கள் கோரிக்கைகளை பல்கலைகழகத்திடம் ஒப்படைக்குமாறும்  தாங்களே மத்திய அரசுக்கு பல்கலைகழகம் சார்பாக முத்திரைத்தாழில் அச்சடித்து அனுப்பிவிடுகிறோம் என்று உறுதியளித்தையடுத்து மாணவர்கள் தங்களின் போராட்டத்தினை கைவிட்டுச்சென்றனர்.  
இதையடுத்து பல்கலைக்கழகம் நாளை முதல் வகுப்புகள் ஏதும் நடைபெறாது மறுஅறிவிப்பு வரும் வரை காலவறையற்ற விடுப்பு அளிக்கப்பட்டது.

கோபிநாத்...