வர இருக்கும் கட்டுரை


குளிரூட்டப்பட்ட அறைக்குள் அமர்ந்து கணிப்பொறி உதவியுடன் வாழ்க்கைப்பயணத்தை தொடங்கிவிட்டேன் என்ற எண்ணம் எனக்குள்... ஒருமுறை நான் பனிபுரியும் அலுவலகத்தின் சன்னல் திரையை விளக்கிபார்த்த போது தான் தெரிந்தது... இன்னும் வறுமையின் கரங்களில் சிக்கித்தவிக்கும் மக்கள் வாழும், சாபம் நிறைந்த சமூகத்தில் தான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் என்று!!!

Sunday 20 January 2013


2012 ஆம் ஆண்டுக்கான சாகித்யா அகாடமி விருது பெற்ற ’’தோல் நாவல்.’’
      ஜனவரி 11 ஆம் திகதி முதல் 36 வது சென்னை புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை நந்தனம் YMCA கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் எழுத்தாளர் டி.செல்வராஜ் எழுதிய சாகித்தியா அகாடமி  விருதும் தமிழக அரசால் சிறந்த நாவலுக்கான விருதையும் பெற்ற தோல் நாவல் கண்காட்சி விற்பனைப் பிரிவில் இடம் பெற்றிருந்தது வாசகர்களிடையே மிகவும் வரவேற்பைப் பெற்றது.
                 சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் 36வது புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது. இங்கு 600 அரங்குகளில் சுமார் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான பதிப்புகள், பெரும் எழுத்தாளர்களின் நாவல்கள் , சிறுகதைகள், குழந்தைகளுக்கான ஆங்கிலம் மற்றும் தமிழ் கதை புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.  தினமும் மாலை4 மணி முதல் கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. இதில் நேற்று 19ஆம் திகதி மாற்றுத்திரனாளிகளுக்கான கருத்தரங்கும் நடைபெற்றது.  இந்த கண்காட்சி வரும் 23ஆம் திகதி முடிவடைய இருக்கிறது. துவக்கம் முதலே வாசகர் வரத்து இந்த வருடம் எதிர்பார்த்த அளவில் இல்லை காரணம் விலை அதிகம் சென்ற வருடம் வந்த புத்தகங்களே இந்த வருடமும் வந்துள்ளதாகவும் எனவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இந்த கண்காட்சியில் நியு செஞ்சுரி புக் ஹவுஸ் ஆல் விற்கப்படும் தமிழில் முற்போக்கு எழுத்தாளர்  டி.செல்வராஜ் எழுதி 2012 ஆம் ஆண்டுக்கான சாகித்யா அகாடமி விருதும் தமிழக அரசால் சிறந்த நாவலுக்கான  விருதினை பெற்ற ’’தோல் நாவல்.’’  வாசகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.  இந்த புத்தகம் திண்டுகல்லை சுற்றி செயல்படும் தோல் பதனிடும் தொழிலை மையமாக வைத்தும்,1970களில் ஏற்பட்ட தோல் நோய் பற்றியும் சுன்னாம்புக் கால்வாய்கலில் பணியாற்றி இறந்தவர்கள் பற்றியும் தோல் தொழிற்சாலை கழிவு நீரால் விளை நிலங்களும், குடிநீரும் எப்படி மாசுபட்டு கிடக்கிறது என்பதை இன்று கண்கூடாகப் பார்க்கிறோம்அந்த தோல் ஷாப்புகளில் உடலும் உள்ளமும் ரணமாக உழைத்த; நாற்றத்திலும் வெக்கையிலும் பொசுங்கிய அந்த மனித ஜீவன்களை என்றைக்காவது நாம் நினைத்துப் பார்த்ததுண்டா? என்ற கேள்வியுடன் எழுதியுள்ளார்.
இதை பற்றி நியு விற்பனையாளர் கூறுகையில் :
இதன் முதல் பாகம் 2010 ஆம் ஆண்டு வெளியானது ஆனா அவ்வளவு வரவேற்பு இல்லங்க ஆனா இரண்டாம் பாகம் இந்த கண்காட்சி துவங்கிய  நாட்களில் இருந்தே நல்ல விற்பனை முதலில் எங்ககிட்ட மட்டும் தான் இருந்தது இப்ப 5 ஸ்டால்களில் அதாவது கடை என் 367,181 & 182, 123 , 492 & 493 , 571 இவை அனைத்து கடைகளிலும் ஒரு நாளைக்கு சுமார் 50க்கும் மேலான பதிப்புகள் விற்பனையாகிறது என்கிறார் நியு செஞ்சுரி புக் ஹவுஸ் விற்பனையாளர் கோபி.



கோபிநாத்