வர இருக்கும் கட்டுரை


குளிரூட்டப்பட்ட அறைக்குள் அமர்ந்து கணிப்பொறி உதவியுடன் வாழ்க்கைப்பயணத்தை தொடங்கிவிட்டேன் என்ற எண்ணம் எனக்குள்... ஒருமுறை நான் பனிபுரியும் அலுவலகத்தின் சன்னல் திரையை விளக்கிபார்த்த போது தான் தெரிந்தது... இன்னும் வறுமையின் கரங்களில் சிக்கித்தவிக்கும் மக்கள் வாழும், சாபம் நிறைந்த சமூகத்தில் தான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் என்று!!!

Saturday 9 February 2013


இது விளம்பரம் இல்லங்க.,





                                                                                                        நமது தமிழ்நாட்டில் பெரும்       மாவட்டங்கள்,    மாநகரங்கள் உள்ளன அதிலும் மிகமுக்கியமான அதிகபடியான தொழில்அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், திரைத்துறையினர்        என பல முக்கியஸ்த்தர்களையும்          பல அடுக்குமாடிக்குடியிருப்புகளையும் பல வகையான பொழுது போக்கு அம்சங்களைக்கொண்டுள்ளது நம் சென்னை மாநகராட்சி. அதிலும் ”இன்னைக்கு நான் வண்டி இக்ழுகலேனா என் பிள்ளைகள் பட்டினி தான் என்று புழுவாய் துடிக்கும் தந்தை மார்கள் ஒருபுரம் இருக்க”, ”இல்லை அண்ணா இன்னைக்கு இந்த சுண்டல காலி பன்னாம வீட்டுக்கு போனா அம்மா திட்டுவாங்க அப்பா அடிப்பாரு”. என வெந்து கொண்டிருக்கும் பிஞ்சுகழும் இங்கு தான் இருக்கின்றனர்.

இது போன்ற பகுதிகளை பார்க்க ஆசை தெருவில் உள்ள தார்சாலையில் உருவாகியுள்ள குட்டையில் தேங்கிநிர்க்கும் கழிவு நீர் அதற்க்கு அருகில் விளையாண்டுக்கோண்டிறுக்கும் குழந்தைகள், மக்கிப்போன குப்பைகள் துருநாற்றம் ஆங்காங்கே குடிசைவீடுகளின் வாசலில் காணப்படும் காய்ந்த மீண்களின் வாசணை. அப்படி நான் பார்க்கச்சென்ற இடம் தான் காசிமெடு இந்திராநகரில் ஒரு பகுதி. அங்கு ஒரு வித்தியாசமான வாகனம் நின்று கொண்டிருந்தது அருகில் சென்று ”என்ன சார் இது” என்றேன்!!!!!!

சற்று தயக்கத்துடன் இது நடமாடும் மருத்துவமணை இங்கு அடிப்படைநோய்கள் அதாவது சளி, காய்ச்சல், இருமல், போன்ற வற்றிட்க்கு மருந்துகள் கொடுப்போம் மக்களின் விருப்பத்திற்க்கேட்ப ஆயுர்வேதா சித்தா போன்ற மருந்துகளும் கோடுப்போம். இந்த சேவை துவங்கி பத்து வருடங்கள் ஆகிறது காசிமேடு, திருவேற்றியூர், தண்டையார்பேட்டை, திருவேற்காடு, வியாசர்பாடி திணம் ஒரு பகுதிக்கு சேல்வோம் ஒன்று மற்றும் பதினைந்தாம் திகதி இங்கு (காசிமெடு) வருவோம் இங்கு (சென்னை) இரண்டு வண்டிகள் உள்ளன இதே போன்று கோவை, திருச்சி, சேலத்திலும் எங்கள் சேவை வண்டிகள் உள்ளன. இந்த வாகனத்தில் இரண்டு மருத்துவர்கள் இரு பணிப்பெண்கள் ஒரு வாகண ஓட்டியும் உள்ளார்.,எங்களுக்கு சொல்லிக்கொல்லும் அளவிற்கு சம்பளம் இல்லாவிட்டாலும்.., சமூகத்திற்கு ஒரு சேவை செய்கிறோம் என்ற மனநிறைவு உள்ளது அது போதும். ஒரு நாளைக்கு 50க்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வந்து சிகிச்சை பெற்றுக்கொள்கின்றனர். தற்போது எங்கள் அய்யாவிற்கு வரும் நன்கொடை மூலம் இதனை செயல்படுத்திக்கொண்டிருக்கிரார். இன்னும் சில தினங்களில் அதிநவீன வாகனங்கள் அதில் இ.சி.ஜி, இரத்தப்பரிசோதனை, இவற்றுடன் வரவிருக்கின்றன. என்றார் மகிழ்ச்சியாக…………………………….