வர இருக்கும் கட்டுரை


குளிரூட்டப்பட்ட அறைக்குள் அமர்ந்து கணிப்பொறி உதவியுடன் வாழ்க்கைப்பயணத்தை தொடங்கிவிட்டேன் என்ற எண்ணம் எனக்குள்... ஒருமுறை நான் பனிபுரியும் அலுவலகத்தின் சன்னல் திரையை விளக்கிபார்த்த போது தான் தெரிந்தது... இன்னும் வறுமையின் கரங்களில் சிக்கித்தவிக்கும் மக்கள் வாழும், சாபம் நிறைந்த சமூகத்தில் தான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் என்று!!!

Sunday 13 January 2013

மறக்க முடியாத ”திசம்பர் 25” சுனாமி

சென்னை திசம்பர் 25. 
             கடலுக்கும் கோபம் வரும் இப்படியும்  ஓர்  இயற்கை பேரிடர்  இருக்கிறது என்பது  பெரும்பாலானோருக்கு  தெரிந்த தினம் அந்த கறுப்பு ஞாயறு அதை நினைவிருக்கும்.      2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் நாள் (ஞாயிற்றுக் கிழமை), உலகையே நடுங்கச் செய்த நாள்.அன்றைய தினம் காலை இந்தோனேசியாவில் உள்ள சுமத்திராதீவில், கடலுக்கு அடியில் ஏற்பட்ட பூகம்பத்தால் சுனாமி என்றபேரலை விசுவரூபம் எடுத்து, பயங்கர வேகத்துடன் ஊருக்குள்புகுந்தது.
          இதில் எந்த விதமான எதிர்ப்பார்ப்புமின்றி கடற்கறையின் காற்றினை சுவாசிக்கச்சென்றவர்கள் விடுமுறை நாளான அன்று அங்கு பொழுதைக் கழிக்க வந்த மக்கள் மட்டுமல்லாது சுற்று இருக்கும் குடும்பங்களையும் வீடுகளையும் கொண்டுசென்றது இது தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் இயற்கைப் பேரிடரில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்துதல்  முக்கிய நோக்கமாக இருக்கிறதுஇந்தத் தினம் அனுசரிப்பதன்நோக்கம் அந்தக் கறுப்பு தினத்தில் தமிழகத்தில் சுமார் 8,000 பேர்உயிரிழந்தனர் தமிழகத்திலுள்ள 13 கடலோர மாவட்டங்களின் கிட்டத்தட்ட 10,68,600 பேர் பாதிப்புக்கு உள்ளாகினர்.
3,300 வீடுகள் சேதம் அடைந்தன.இதில்கடற்கரையில் நின்றவர்களும்கடலோர கிராமங்களில்வசித்தவர்களும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர்.இந்த கோர சம்பவத்தில் இந்தோனேசியாஇலங்கைஇந்தியாஉள்பட பல நாடுகளின் கடற்கரை ஓரம் வசித்த 2 லட்சத்து 30ஆயிரம் பேர் மரணம் அடைந்தனர்.தன்னுடைய ருத்ர தாண்டவத்தினை அரங்கேற்றி பல ஆயிரம் அல்ல இலட்சம் அல்ல எண்ண முடியாத அளவில் பல உயிர்களை விழுங்கி தன் பசியை தீர்துக்கொண்டது இந்த சுனாமி பேரலை.  தாக்கி 8 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி கடற்கரை கிராமங்களில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி ஏற்பட்ட சுனாமி பேரழிவால் சென்னை மாவட்டத்தில் 1000க்கும்

மேற்பட்டோர் சுனாமி பேரலைக்கு பலியாகினர். சுனாமி தாக்கிய நாளான நேற்று இறந்தவர்களுக்கு அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலங்கிய உள்ளத்தோடு அஞ்சலி செலுத்தினர்.

சுனாமியால் பலியானவர்கள் ஆத்மா சாந்தியடைய நேற்று தமிழ்நாடு மீனவர் பேரவை தலைமை நிலைய செயலாளர் N.S கிருஷ்ணன் மாவட்ட தலைவி திருமதி. தேவி அவர்களின் தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு அருகில் இருந்து காவல்துறை ஆணையர் அலுவலத்திற்க்கு முன் வறை கடற்கரையில் மீனவர் பேரவை சார்பில் மீனவ பெண்கள் ஊர்வலமாகச் சென்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
பின்னர் கடலில் பாலூற்றியும், பூக்களைத் தூவியும் அஞ்சலி செலுத்தினர். கடற்கரையோரத்தில் பலியான குழந்தைகளின் உருவப்படத்திற்கு மலர் வளையம் வைத்து 10 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.   
       சுனாமி பேரலையால் பெற்றோர்களை இழந்து அரசு சேவையில்லத்தில் வசித்து வரும் குழந்தைகளுடன் நேற்று கலெக்டர் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார். பின்னர் குழந்தைகளுக்கு உணவு வழங்கி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்யும் என உறுதியளித்தார் . மாவட்ட சமூக நல அலுவலர் புவனேஸ்வரி உடனிருந்தார் மற்றும் பலர் இந்த நிகழ்வில் பங்கெடுத்தனர்.
இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தம் விதமாக மீன் பிடிக்கச் செல்லவில்லை இதனால் துறைமுகத்தில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன கடற்கரையோர கிராமங்களில் உள்ள நினைவு கல்வெட்டுகளில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
சென்னைநாகப்பட்டினம்கடலூர்கன்னியாகுமரி ஆகியபகுதியில் கடலோர பகுதியில் வசித்த ஏராளமானவர்கள்கடலுக்கு இரையாயினர்.இந்த நிகழ்வுக்குப் பிறகு பலியானோர் குடும்பத்துக்கு நிதியுதவி,வீடுகளை இழந்தோருக்கு குடியிருப்புகள் என நிவாரணஉதவிகள் உரிய முறையில் வழங்கப்பட்டன.மனிதரால் ஏற்படுத்தப்படும் பேரிடர்களை முன்கூட்டியே தடுத்துநிறுத்திவிடுவதற்கு சாத்தியம் பல உண்டுஆனால்இயற்கைபேரிடரை தடுப்பதற்கான வாய்ப்பு மிகச் சொற்பமே.
இந்தத் தருணத்தில்தான் நாம் யோசிக்க வேண்டும்தடுக்கமுடியாத பேரிடர் ஏற்பட்ட பிறகு அதை எப்படி எதிர்கொள்வதுஎன்பதை விவரிப்பதுதான் இயற்கை பேரிடர் மேலாண்மை.இயற்கை சீரழிவுகள் ஏற்பட்டவுடன்முழுமையாக மீட்புப்பணிகளையோநிவாரணப் பணிகளையோஉதவிகளைமேற்கொள்ளும் பொறுப்பு அரசுக்கும்பாதுகாப்புஅதிகாரிகளுக்கும் மட்டுமே உரித்தானது அல்லஒவ்வொருகுடிமகனுக்கும் உரித்தானது.
எனவேஅந்தத் தருணங்களில் மக்கள் தங்களைத் தானாகவேஅனிச்சையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்சாதாரணபணியாளர்கள் முதல் அலுவலக பணியாளர்கள் வரைஅனைவரும் இது போன்ற சூழ்நிலைகளில் எப்படி நடந்துக்கொள்வதுபாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி உதவி செய்வதுஎன்பதை அறிந்துக் கொள்ள செய்வது மத்திய மாநில அரசுகளின்இன்றியமையா கடமை.இயற்கை சீரழிவு ஏற்பட்டவுடன் சில வாரங்கள் அதிகப்பட்சம் ஒருமாதம் மட்டும் தான் அனைவரும் வேகமாக  செயல்படுகிறோம்.ஆண்டு முழுக்க 365 தினங்களும் அதிகாரிகள் செயல்பட்டால்தான்முழுப் பலன் கிட்டும்.
சுனாமியால் உயிர்கள் பலியானது ஒருபுறம்.
உயிர் தப்பியோர் பலருக்கும் உளவியல் ரீதியான பாதிப்பு ஏற்பட்டதுஇதை போக்க அரசும்தன்னார்வ தொண்டுநிறுவனங்களும் உளவியல் மருத்துவ கலாந்தாய்வுமுகாம்களை நடத்தியது பாராட்டுக்குரியது.மாணவப் பருவத்திலே பள்ளிக் கல்வியிலேயே பேரிடர்மேலாண்மையை ஒரு பாடமாக வைப்பது நல்ல பலனை தரும்.இயற்கை பேரிடர்களின்போது எப்படி செயல்படுவது என்பதுபற்றிய பாடங்களை பள்ளிக் கூட நிலையிலேயே கற்றுத் தரலாம்.

இதைபற்றி குழு ஒருங்கினைப்பாளர் கூறுகையில் : நாங்க புதுச்சேரியில் இருந்து வரோம் கடந்த 8 வருசமா இங்க மேரினா கடற்கரைக்கு வந்து இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காந்திசிலைக்கு அருகில் இருந்து ஆனையர் அலுவலகம் முன்பு வரை பால் குடம், மலர்களை எடுத்து க்கொண்டு செயிண்ட் பீட்டர்ஸ் பள்ளி மாணவர்கள் பேண்டு வாத்தியங்கள் முழங்க வந்து பால் மற்றும் பூக்களை கடலில் கழந்து 5ந்து நிமிட மவுன அஞ்சலி செலுத்துவோம் அதுமட்டுமின்றி எங்கள் குழுவில் 1000த்துக்கும் மேற்ப்பட்ட உறுப்பினர்கள் இருக்கிறார்கள் அதிலும் முக்கிய பொருப்பில் இருக்கும் பெண்களுக்கு காவிநிற சீளையும் உறுப்பினர்களுக்கு நீலநிற சீளையும் அனிந்து தான் இந்த நிகழ்வுக்கு வருவார்கள் என்றார்..