வர இருக்கும் கட்டுரை


குளிரூட்டப்பட்ட அறைக்குள் அமர்ந்து கணிப்பொறி உதவியுடன் வாழ்க்கைப்பயணத்தை தொடங்கிவிட்டேன் என்ற எண்ணம் எனக்குள்... ஒருமுறை நான் பனிபுரியும் அலுவலகத்தின் சன்னல் திரையை விளக்கிபார்த்த போது தான் தெரிந்தது... இன்னும் வறுமையின் கரங்களில் சிக்கித்தவிக்கும் மக்கள் வாழும், சாபம் நிறைந்த சமூகத்தில் தான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் என்று!!!

Friday 21 February 2014


னிக நிறுவனங்களின் கவர்ச்சி நுகர்வோரின் மதிப்பு ?...

     நம்ம இத்தன நாளா எத்தனையோ பொருட்கள் வாங்கியிருக்கிறோம் வாங்கிட்டு தான் இருக்கிறோம். அது விலை அதிகமான வாகனமோ இலக்ட்ரானிக் பொருட்களோ எதுவாக  இருந்தாலும்.. வாங்கும் போது என்ன விலை அதை விற்க்கும் போது என்ன விலைக்கு போகிறது என்பதை நாம் கண்டுகொள்வதில்லை. இது ஏன்இதற்க்கு மேல் பொருளை வாங்கும் போது நமக்கு ஒருவருடம் வாரண்டி கொடுக்கிறார்கள். அது பிரச்சனை  பண்ண  ஆரம்பிக்கும் போது  சர்வீஸ் சென்டர்ல எந்த பிரச்சனையும் இல்லாம சரி பண்ணிக்க முடியுது. அதுவும் ஒரு வருடத்திற்க்கு இலவச சர்வீஸ் தான் செய்து தருவோம் என்பார்கள் அது என்ன சர்வீஸ் என்று கேட்டால் செண்டர்களில் பதில் இல்லை வாரண்டி முடிஞ்சு போய் ஏதாவது பிரச்சனைன்னா பொருள் வாங்கின விலையில பாதிவிலைக்கு சர்வீஸ் சார்ஜ் போடறாங்க. சரி இவ்வளவு விலை கொடுத்து வாங்கறோமே இத கொஞ்ச நாள் யூஸ் பண்ணிட்டு நல்லா இருக்கும்போதே கொடுத்துட்டு எக்ஸ்சேஞ்ச்ல வேற வாங்கிக்கலாம்னு கடைங்களுக்கு போனா வாங்கின விலையில பாதி விலைக்கு கூட கேக்காமா அடிமாட்டு விலைக்கு கேட்பதில் என்ன நியாயம்?...

அப்படீன்னா நாம வாங்கற எல்லா பொருட்களுக்கும் தயாரிப்பு விலை ரொம்ப ரொம்ப கம்மியா இருக்கும் போலிருக்கு. இடைத்தரகர்கள் அடிக்கிற கொள்ளை தான் அதிகமா இருப்பது போல் தெரிகிறது.  குறிப்பாக  இது மட்டும் தான் இல்ல. இப்போ வர்ற எந்த பொருளா இருந்தாலும் கொடுக்கிற விலைக்கு மதிப்பாக எதுவும் நமக்கு சர்வீஸ் பண்றது இல்ல.

இதைவிட நாம் அன்றாடம் பயன்படுத்தும் இந்த இருசக்கர வாகனங்களை எடுத்துக்கோங்க. ஒரு 10000 கிலோமீட்டர் ஓடினாலே செலவு வைக்கத்தொடங்குறது. மாத்தியே ஆகனும்கிற கட்டாயம் உருவாயிடுது. இதுக்கு முன்னாடி எல்லாம் அப்படி இல்ல. 10 வருஷத்துக்கு முன்னாடி ஒரு செயின் ஸ்பிராக்கெட் லைஃப் 30ஆயிரத்திலேந்து 40ஆயிரம் கி.மீ. வரை இருந்தது. நான் என்னோட ஹீரோ ஹோண்டா வண்டியை 45 ஆயிரம் கி.மீ வரை செயின் ஸ்பிராக்கட் மாத்தாம ஓட்டியிருக்கேன்.. இந்த விவரத்தைச் சொல்லி சர்வீஸ் சென்டர்ல கேட்டா, சார் இப்போ எல்லாம் இப்படித்தான் ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிக்கிறாங்க.. சீக்கிரமா தேய்ஞ்சு போயிடனும். புதுசா கஸ்டமர்ஸ் மாத்திகிட்டே இருக்கனும்கிறாங்க. நாங்க என்ன சார் பண்றது. எல்லாம் வியாபாரம்.. வியாபாரம்கிறாங்க.. வாங்கிற வண்டிங்களும் ஒரு நாலைஞ்சு வருஷத்துல மோசமான நிலைக்கு போயிடுது.

 
நம்ம நாட்லே எந்த தயாரிப்புக்குமே குவாலிட்டி கன்ட்ரோல் சரியில்ல. எதையும் யாரும் கண்காணிக்கிறது இல்ல.. இங்கேயிருந்து வெளி நாட்டுக்கு அனுப்புற பொருள தனியா க்வாலிட்டியா தயாரிச்சு அனுப்பறாங்க. அதே மாதிரி வெளிநாட்லேந்து கொண்டு வர்ற பொருள்களின் தரம் ரொம்ப நல்லா இருக்கு. காரணம் அங்க தயாரிச்சு விக்கிற பொருளும் இம்போர்ட் பண்ற பொருளும் தரமா இருந்தாத்தான் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கமுடியும். ஆனா இங்க.?? எல்லாம் பணம் பணம்.. தயாரிப்பு நிறுவனங்கள் கொடுக்கவேண்டியவங்களுக்கு பணத்தை தூக்கிப்போட்டா க்வாலிட்டியாவது மண்ணாவது?

நுகர்வோர்கள் எக்கேடு கெட்டுப்போனால் நமக்கென்ன? நமக்கு கிடைக்கவேண்டிய பணம் கிடைச்சா விடு ஜூட்டுன்னு போய்க்கிட்டே இருக்காங்க அதிகாரிங்களும் அரசியல்வாதிகளும்.. இந்த நிலைமை எல்லாம் நம்ம நாட்ல மாறவே மாறாதா?  

கோபிநாத்...