வர இருக்கும் கட்டுரை


குளிரூட்டப்பட்ட அறைக்குள் அமர்ந்து கணிப்பொறி உதவியுடன் வாழ்க்கைப்பயணத்தை தொடங்கிவிட்டேன் என்ற எண்ணம் எனக்குள்... ஒருமுறை நான் பனிபுரியும் அலுவலகத்தின் சன்னல் திரையை விளக்கிபார்த்த போது தான் தெரிந்தது... இன்னும் வறுமையின் கரங்களில் சிக்கித்தவிக்கும் மக்கள் வாழும், சாபம் நிறைந்த சமூகத்தில் தான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் என்று!!!

Sunday 24 March 2013


வீழ்வதற்காக எழவில்லை!!!



இளைஞர்கள் என்றாலே, அனைவரினதும் சாபத்துக்குரியவர்கள். எதற்கும் பயம் இல்லாமல் எதற்கேடுத்தாலும் வன்முறை, அதிகமான கோபம், எந்த விதமான குறிக்கோளோ, கவலையோ இல்லாதவர்கள். மூத்தவர்கள் தங்கள் அனுபவங்களையும் அறிவுறைகளையும் சொன்னால்யோவ் பெருசு போமாட்ட அடி வேனுமா?” என்கிற பதில்தான் வரும். அதிலும் மாணவர்கள் என்றாலோ சொல்லத்தேவையேயில்லை. சாலையில் இருசக்கர வாகனத்தில் X போடுவது. காவலர்களை பார்த்தால்என்ன மாமா சவுகியமாஎன்பதுடன் அவன்உருப்படமாட்டான்என்கிற சொல் அப்பாவிடம் இருந்து வரும். இவர்கள் செய்யும் சேட்டைகளை பார்க்கும் பொதுமக்கள், “இதுங்கல்லாம் எங்க வெலங்கப்போகுது பெத்துவிட்டரானுங்க இப்படி தறுதலையா அலையுதுங்கஎன்பவர்களே அதிகம்.
ஆனால் அதே மாணவர்கள் உண்மையான கோபத்துடன் வீதியில் இறங்கியதன் விளைவு.
.நா. மனித உரிமைகள் பேரவைக்கான அமெரிக்காவின் தூதுவர் எலின் சம்பர்லைன் டொனஹே மாணவர்களின் போராட்டத்தை சாதாரணமான விடயமாக கருதிவிட முடியாது என்றும், மாணவர் போராட்டம் குறித்து அமெரிக்கா மிகவும் கவனமாக அவதானித்துக் கொண்டிருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் மாணவர்கள் ஒன்றுசேர்ந்து நடத்தும் போராட்டத்தை இலேசான விடயமாக கருதிவிட முடியாது. தனித்தமிழீம் அமைய வேண்டும், பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டுமென பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் மாணவர்களின் தொடர் போராட்டங்கள் வெடித்தன. இந்தப் போராட்டங்களின் விளைவாக, இலங்கையில் ஆயுதமேந்திய போராட்டத்தினை ஒடுக்கும் வகையில் ராணுவத்தினர் செய்த இனப்படுகொலைகள், போர்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் வெளிச்சத்திற்கு (உலக மக்களுக்கு) தெரிய வந்துள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரன் இலங்கை அரசால் கொல்லப்பட்ட இரண்டு புகைப்படங்களைஇங்கிலாந்து நாட்டைச் சார்ந்த சேனல்4 தொலைக்காட்சி நிருவனம் வெளியிட்டது. இந்தப் படங்கள் மக்களை மிகவும் மனஅழுத்தத்திற்குள்ளாக்கியது. இதனால் உணர்வுவெடித்து கோபத்துடன் வெளியே வந்த சென்னை மாணவர்கள் 8 பேர் பற்ற வைத்த அறப்போராட்டத் தீ பற்றி எரியத் துவங்கியது.
சென்னை மாணவர்களை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு தன்னால் முடிந்த வரை காவல்துறையை முடுக்கிவிட்டும், கட்டுக்கடங்காத மாணவர்களின் போராட்டம் நாளடைவில் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே வெடிக்கத்துவங்கியது.
சென்னை, கோயமுத்தூர், திருச்சி, மதுரை, திருப்பூர், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கூடுகின்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணியாக சென்று போராடினர். தொடர் உண்ணாவிரதம், அடையாள உண்ணாவிரதம், மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை, விமான நிலையம் முற்றுகை, சாலைமறியல், ரயில் மறியல், ராஜபக்சேவின் கொடும்பாவி எரிப்பு என பல்வேறு வடிவங்களில் நடந்த மாணவர்களின் போராட்டங்கள் தமிழகத்தில் பெறும் அதிர்வுகளை உண்டாக்கியது.
இதைத்தடுக்க தமிழக அரசு சாதுர்யமாக அனைத்து கலை, அறிவியல் கல்லூரி, சட்டக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, வேளாண் கல்லூரி உள்ளிட்ட அனைத்துக் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்த பின்னரும் கூட மாணவர்களின் எழுச்சி மிக்க போராட்டங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க சில இடங்களில் காவல்துறையின் அத்துமீறல்களும் தடியடியும் நடந்ததும் நமக்கு தெரியும், திருச்சியைத் தொடர்ந்து, மதுரையில் சட்ட கல்லூரி மாணவர் அய்யாத்துரை காவல்துறையால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுபோன்ற செயல்கள் மத்திய காங்கிரஸ் அரசு மீது மட்டுமின்றி தமிழகத்தை ஆளும் .தி.மு.. அரசின் மீதும் மாணவர்களிடத்தில் கோபத்தை உண்டாக்க காரணமாக அமைந்தது. அதனால் போராட்டத்தின் வீரியமும் அதிகமானது. தமிழக மாணவர்களின் உணர்வு என்பது இரத்த சகதியில் உறவுகளைப் பறிகொடுத்து விட்டு, உயிர்வாழ உத்தரவாதமின்றி அகதிகளாக சுற்றித்திரியும் புலம் பெயர் தமிழர்கள் மத்தியிலும், முள்வேலி முகாம்களில் பசித்த வயிற்றோடு பரிதவித்து சித்திரவதைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஈழத்தமிழ்மக்களிடத்திலும் சிறிதேனும் நம்பிக்கையளித்திருக்கின்றது. அந்த நம்பிக்கை ஒளிக்கீற்று தமிழகத்தில் மாணவர்களின் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சி விளைவாக உருவானது என்றுதான் கூறவேண்டும்.
அதேவேளையில், தமிழக மாணவர்களின் போராட்டம் குறித்து சர்வதேச ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டுவருவது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஆதரவாக மக்களும் உண்ணாநிலை போராட்டத்தினை நடத்தும் தொடர்ச்சியாக இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்கக் கோரியும் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கக் கோரியும் தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகம் தகித்துக் கொண்டிருப்பதால் மத்திய அரசிற்கும் நெருக்கடிகள் முற்றி வருகின்றன.
தமிழ்நாட்டு மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டிருகின்ற இந்த எழுச்சி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இவ்வளவு காலம் இல்லாத ஒரு நிகழ்வு தமிழ்நாட்டு மாணவர்களிடேயே இப்போது உருவாகியிருப்பது ஈழத்தமிழ் மக்கள் மனதில் ஒரு சந்தோஷத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய அரசியலில் ஏற்பட போகும் மாற்றங்கள் இந்த போராட்டங்களை தடுக்குமா அல்லது இந்த போராட்ட விடயத்துடன் நின்று போகுமா என்பதும் சிறு ஐயம் அனைவர் மத்தியிலும் உண்டு.
ஆனால் மாணவர்களோ!! எந்தவித கட்சிசாயமும் இல்லாமல் தங்களின் உணர்வுகளுக்கு ஆதரவு கொடுக்க வந்த வை.கோபாலசாமி, திருமாவளவன், நெடுமாறன், T.R. பாலு போன்ற கட்சித்தலைவர்களையும் உதாசினப்படுத்தி வெளியே அனுப்பினர்.
இதற்கிடையில் மாணாவர்களின் போராட்டம் முன்பு போல இல்லை மாணவர்களுக்கு சரியான புரிதல் இல்லை. வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடன் போராட்டத்தினை துவங்கி நடத்தினர் ஆனால் அவர்களது பல கோரிக்கைகள் நீண்டகாலமாக இழுக்ககூடியவை. ஒருங்கிணைப்பு, திட்டமிடல் இல்லாமல் சாதிக்க முடியாதவை, என பல முனுமுனுப்புகள் எழுந்துள்ளன. இருப்பினும் எந்த போராட்டத்திலும் வெற்றிபெற தெளிவான இலக்கு, ஒரே பார்வை, செயல்முறை திட்டம், சரியான ஒருங்கினைப்பு இவை மிகமுக்கியமான தேவை. தானாகவே எழுந்துள்ள இந்த மாணவர்கள் போராட்டத்தில் இவை இல்லை. இந்த போராட்டங்கள் சிறிது காலத்திற்கு பிறகு போகலாம் அல்லது தங்களுக்கு ஆதாயம் இல்லை என்று அரசியல் கட்சிகளின் சூழ்ச்சியால் , நீர்த்துபோகச் செய்யலாம். இதை முடக்கவும் முயற்சி செய்யலாம். ஆனால் இந்த எழுச்சி மங்கிவிடக்கூடாது. வீழ்ச்சியாகாது. எனவே மாணவர்கள் ஒன்று திரண்டு போராட வேண்டும். போராடுவார்கள் என்ற நம்பிக்கை இன்னும் அனைத்து மக்களுக்கும் இருக்கிறது.
இவர்கள் வீழ்வதற்காக எழவில்லை, வீழ்த்துவதற்காக எழுந்துள்ளனர்…….