வர இருக்கும் கட்டுரை


குளிரூட்டப்பட்ட அறைக்குள் அமர்ந்து கணிப்பொறி உதவியுடன் வாழ்க்கைப்பயணத்தை தொடங்கிவிட்டேன் என்ற எண்ணம் எனக்குள்... ஒருமுறை நான் பனிபுரியும் அலுவலகத்தின் சன்னல் திரையை விளக்கிபார்த்த போது தான் தெரிந்தது... இன்னும் வறுமையின் கரங்களில் சிக்கித்தவிக்கும் மக்கள் வாழும், சாபம் நிறைந்த சமூகத்தில் தான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் என்று!!!

Tuesday 14 January 2014


வ்வொரு மனிதனுக்கும் தன் வாழ்நாள் முடிவதற்க்குள்  தனக்கென ஒரு வீடு அல்லது ஒரு மனையாவது வாங்கிட வேண்டும் என்ற கனவு  நிச்சயம் நிச்சயமாக இருக்கும். பொன், பொருளின் மீது ஆசைப்படுபவர்களை விட மண் மீது ஆசைப்படுபவர்கள் தான் அதிகம். முதலில் தங்குவதற்க்கு ஒரு வீடு வாங்கினால் போதும் என்று தான் துவங்குவோம் ஆனால் ஆசை அடக்க முடியாத ஒரு பேய் போல ஒரு முறை பிடித்துவிட்டால் அத்துடன் நிறுத்தாது மீண்டும் மீண்டும் வீடோ நிலமோ வாங்குவது தான் அன்று முதல் இன்று வரை நடைமுறையில் இருந்து வருகிறது.

அதுவும் குறிப்பாக படித்தவர்கள் வீடு வாங்கியே தீரவேண்டும் என்று தனக்கு வரும் சம்பளத்தையும் பொருட்படுத்தாமல் வங்கிகள், இருக்கும்  நகைகளை அடமானத்தில் வைத்தல் என  வேறு எங்கெல்லாம் கடன் கிடைக்க வழி யிருக்கிறது என்பதை ஆறாய்ந்து கொஞ்சம் கொஞ்சமாக குருவி சேர்ப்பது போல சேர்த்து வைத்து வீட்டை வாங்குகின்றனர், அவ்வாறு வீடு வாங்கும் சந்தோசத்தில்  யார் சொன்னாலும் அவர்களுக்கு வேதவாக்காகத்தான் தெரியும் எதையும் பார்க்கமாட்டார்கள் நிலம் வாங்கும் ஆசையில் இப்படி ஒன்றும் தெரியாமல் ஏமார்ந்தவர்கள் பலர், அதிலும் முன்பின் அனுபவம் இல்லாமல் நிலம் வாங்குபவர்களை குறிவைத்து தாக்குவதில் இடைத்தரகர்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம், எதனால் இந்த நிலை என்றால் நமக்கு போதிய அளவு தெரியாவிட்டாலும் அடிப்படை ஏதாவது தெரிந்திருந்தால் தானே தரகர்களை சரிகட்ட முடியும். சரி அது ஒரு புறம் இருந்தாலும் சொத்து வாங்கும் போது முதலில் என்ன செய்ய வேண்டும்  அதைப்பற்றி இந்த வாரம் பார்ப்போம்..

சராசரியாக குறைந்தது பத்து வருட வில்லங்க பத்திரத்தினை கட்டாயம் பார்க்க வேண்டும். இந்த பத்து வருடங்களில் சொத்து யாரிடமிருந்து யாருக்கு மாறியது அந்த சொத்து மாறிய போது சரியான வாரிசின் கையொப்பத்துடன் தான் மாறியிறுக்கிறதா அல்லது உயில் எழுதிய நபருக்கு சென்றதா யார் யாரிடம் விற்றிருக்கிறார்கள் வாங்கியிருக்கிறார்கள் என்ற தகவல்களை அந்த பகுதி நில பதிவாளர்களிடமோ அல்லது கிரம அதிகாரி அலுவலகத்திலோ சென்று சரி பார்க்க வேண்டும்.

வில்லங்க பத்திரம் மட்டுமல்லாது அதை விட முக்கியமானது   மூல பத்திரம்  அதன் அசல் சரி பார்ப்பதன் மூலமே நீங்கள் வாங்க இருக்கும் சொத்து சரியாக கை மாறியிருக்கிறதா என்பதை முழுவதுமாக அறிய முடியும்.

ஏற்கனவே கட்டப்பட்ட வீடு எனில், அந்த கட்டடத்தை கட்டுவதற்கான அங்கீகாரம் முறையாக பெறப்பட்டுள்ளதா என்பதை தீர விசாரிக்க வேண்டும். கட்டிடம் இல்லாத காலி மனை எனில், அங்கு மனை போட CMDA அல்லது DTCP அங்கீகாரம் உள்ளதா என சரிபார்க்க வேண்டும். இந்த அங்கீகாரம் இருந்தால் தான் அதைஅங்கிகாரம் பெற்ற மனை என சொல்ல முடியும். அப்போது தான் அந்த மனை வாங்க வங்கிகள் கடன் தரும், மின்சாரம் வாங்க் என பல அத்தியாவசியத்தினை பெற முடியும். இவ்வாறு அங்கிகாரம் இல்லாமலும் சில வங்கிகள் கடன் தருகின்றன அது இடத்தினை வைத்து அல்ல, அந்த கடன் தனி நபரின் மதிப்பை வைத்து தான் தரப்படுகின்றன. அவர்கள் சமூகத்தில் நல்ல நிலையில் உள்ளனரா?. இல்லை பணம் தராமல் ஏமாற்ற மாட்டார் என்கிற எண்ணத்தில் தான் வங்கிகள் தருகின்றன. அதே நிலத்துக்கு சாதாரண ஆள் கடன் கேட்டால், அதே வங்கி நிச்சயம் தராது.

நீங்கள் வாங்க எண்ணும் இடத்துக்கான நில வரி அல்லது வீட்டு வரி கடந்த வருடங்களில் கட்டப்பட்டுள்ளதா என்பதை பார்க்க வேண்டும். இதனை பார்ப்பதற்கு இரு காரணங்கள். ஒன்று யார் பெயரில் வீட்டு வரி கட்ட பட்டுள்ளதோ அவர் தான் வீட்டு ஓனர் என்பது அதன் மூலம் தெரிய வரும். அடுத்தது கடந்த சில வருடங்களில் அவர் வரி கட்டா விடில், சொத்து உங்கள் கைக்கு வந்த பின் அந்த வரிகளை நீங்கள் கட்ட நேரிடலாம். முக்கியமாய் சொத்தின் ஒனர்ஷிப்பை உறுதி செய்ய இந்த வரி ரசீதுகள் அவசியம். சிட்டா, அடங்கல் போன்றவையும் கூட வரி ரசீதுகள் தான். அவையும் சரி பார்த்தல் அவசியம்.

சொத்தை விற்க பொது அதிகாரம் தரப்பட்டிருந்தால், அந்த பத்திரமும் அது தான் இறுதியான பத்திரமா என்றும் சரி பார்க்க பட வேண்டும்.

சற்றே பெரிய காலி இடம் எனில் அந்த இடத்தில் பார்க் உள்ளிட்ட இடங்களுக்கு இடம் விடப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும். மேலும் பார்க்குக்கு ஒதுக்கிய இடத்தை உங்களுக்கு விற்க முயல்கின்றனரா என்றும் சரி பார்த்தல் அவசியம்.

இடத்துக்கான கைடு லைன் வேல்யூ என்ன என்பதை பார்த்து அதன் அடிப்படையில்  சொத்து விலையில் 7 சதவீதம் ஸ்டாம்ப் பேப்பர் வாங்க வேண்டும். இப்படி ஸ்டாம்ப் பேப்பர் வாங்குவது அரசுக்கான வருமானம்.

சொத்தை இன்னும் சில மாதங்கள் கழித்து தான் உங்கள் பெயரில் ரிஜிஸ்தர் செய்ய போகிறீர்கள், தற்போது அட்வான்ஸ் தான் தருகிறீர்கள் என்றால், எத்தனை நாளுக்குள் ரிஜிஸ்தர் செய்ய வேண்டும், பணம் எப்போது தரப்படும், முதலில் தரும் அட்வான்ஸ் எவ்வளவு என்பவை குறிப்பிட்டு ஒரு அக்ரிமென்ட் போட்டு கொள்தல் நல்லது. மிக எச்சரிக்கையான சிலர் இந்த அக்ரிமென்ட்டையும் பத்திர அலுவலகத்தில் ரிஜிஸ்தர் செய்து விடுவார்கள்.. அப்போது தான் அதற்கு ஒரு பைண்டிங் போர்ஸ் வரும் என்பதால்

நிலத்துக்கான பட்டா வாங்கப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும். பட்டாவும் நிலத்தின் உரிமையை நிர்ணயிக்கும் தாக்கீது தான்.

 இவை அனைத்தும் சரி பார்ப்பதன் முக்கிய நோக்கம் நிலத்தின் உரிமையாளர் யார் என்று பார்த்து அவர் தான் உங்களுக்கு விற்கிறாரா, அதை விற்க அவருக்கு உரிமை உள்ளதா என நிர்ணயிக்க தான்.உரிமையாளர் தான் உங்களுக்கு விற்கிறாரா என அனைத்து விதத்திலும் உறுதி செய்த பின் தான் அந்த இடம் வாங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும்

இதுவரை படித்ததில் ஒரு விஷயம் உங்களுக்கு புரிந்திருக்கும். இது மிக நுனுக்கமான  விஷயம். இத்தனை விஷயங்களை சாதாரண மக்களால் படித்து புரிந்து கொள்ள முடியாது. சொத்து விஷயங்களை பொருத்தவரை நல்ல வழக்கறிஞரை பார்த்து அவரிடம் இது பற்றிய விஷயங்களை பலமுறை  பார்த்த பிறகே நிலம் வாங்க முடிவெடுப்பது நல்லது என்பது என் கருத்து.

பல லட்சங்களுக்கான உழைப்பை போட்டு  ஒரு   சொத்து வாங்கும் போது சில பலரது ஆலோசனைகளை குறிப்பாக நல்ல  வழக்கறிஞர்களை அலோசனை செய்து அவர்கள் மூலம் நிலம்/ வீடு வாங்கினால் நிம்மதியாக இருக்கும்.

கோபிநாத்...