வர இருக்கும் கட்டுரை


குளிரூட்டப்பட்ட அறைக்குள் அமர்ந்து கணிப்பொறி உதவியுடன் வாழ்க்கைப்பயணத்தை தொடங்கிவிட்டேன் என்ற எண்ணம் எனக்குள்... ஒருமுறை நான் பனிபுரியும் அலுவலகத்தின் சன்னல் திரையை விளக்கிபார்த்த போது தான் தெரிந்தது... இன்னும் வறுமையின் கரங்களில் சிக்கித்தவிக்கும் மக்கள் வாழும், சாபம் நிறைந்த சமூகத்தில் தான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் என்று!!!

Thursday 18 July 2013




விஸ்வரூபம் எடுக்கும் வீட்டு வாடகை






தமிழகத்தில் பல வருடங்களாக நீடித்துவரும் பிரச்சனை அத்யாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு தான் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இவை அனைத்தும் அவ்வப்போது பொழியும் மலை போல. இவற்றையெல்லாம் கடந்து வரும் மக்களின் தலையாயப்பிரச்சனையாக நிற்ப்பது.. வீட்டு வாடகைப்பிரச்சனை தான். அதுவும் குறிப்பாக தலைநகரான சென்னையில் சொல்ல தேவையில்லை, நடுத்தர மக்களின் வருமானத்தில் பாதி வீட்டு வாடைகைக்கே போய் விடுவது கசப்பான உண்மை என்றாலும் வரும் காலங்களில் சந்ததியினர் எப்படி இதை சமாளிக்க போகிறார்கள் என்பது கேள்விக்குறி தான். முன்பு வளசரவாக்கம், அரும்பாக்கம்,சைதாப்பேட்டை, கிண்டி என்றால் வாடகை குறைவு என்று அங்கே வீடு பார்த்தார்கள், பிறகு அது மீணம்பாக்கம்,பல்லாவரம் ஆனது பிறகு தாம்பரம் நோக்கி சென்ற மக்கள், தற்ப்பொழுது அங்கேயும் உயர்ந்து விட்டது. இப்படியே சென்றால் செங்கல்பட்டில் அதைத்தாண்டி தான் வீடு பார்க்க முடியும் போல உள்ளது. 
இருப்பினும் இப்பொழுது சென்னையில் 6000 த்துக்கும் குறைவாக வீடு கிடைப்பதில்லை, அதுவும் பல கண்டிப்புகளுடன் வாடகைக்கு வீடு எடுப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை,  சொல்லப்போனால் ஏலம் விடுவது போல தான் எங்கே சென்றாலும் யார் அதிகம் வாடகை தருகிறார்களோ அவர்களுக்கே வீடு. அதிக வீட்டு வாடகை கொடுப்பது வேறு வழி இல்லை என்றாலும், கொடுக்கும் வாடைகைக்கும் அவர்கள் கொடுக்கும் வசதிகளுக்கும் சம்பந்தமே இருக்காது. எந்த ஒரு வசதியும் செய்து கொடுக்காமல் கண்டபடி வாடகை வசூலிப்பது தான் பலரின் கவலைக்கு காரணம். ஆனால் மாதா மாதம் வசூல் செய்யும் வாடகைக்கு உரிய ரசீதோ,பில்லோ கிடையாது வெரும் துண்டு சீட்டு தான் பலர் அதுவும் கொடுப்பது கிடையாது, ஒப்பந்தப்பத்திரம் செய்ய வேண்டும் என்றால்( குறைந்தது ஒரு பத்திரத்திற்க்கு 150 ரூபாய்) அது வாடகைக்கு வருவோர் தான் முழு செலவினையும் ஏற்று ஒப்பந்தம் எழுதி கொண்டுவந்து கொடுக்க  வேண்டும் வீட்டு உரிமையாளர்கள் எந்த செலவினையும் ஏற்க்கமாட்டார்கள்  வருமானம் ஒன்றே அவர்களது குறிக்கோளாக இருக்கிறது,   வீட்டில் குடியிருபோரிடம் வாடகை குறைந்தபட்சம் 6 மாதத்திற்க்கு ஒரு முறையாவது உயர்த்துகின்றனர் இப்போது தரமுடியாது,அல்லது இப்போது தானே உயர்த்தினீர்கள் என்று கேட்டால் உடனே வீட்டை காலி செய்யும்படி உரிமையாளர்கள்
நான்கு குடும்பங்களுக்கு ஒரு கழிவறை தான் அதை சுத்தம் செய்வதற்க்கு மாதம் 200 ரூபாய் அவசரத்துக்கு குழிக்ககூட முடியாத நிலைதான் ஸ்டோர் வகை குடியிருப்பு!!!!!
துன்புருத்துவதும் என சொல்லமுடியாத அளவிற்கு ஆளாகும் குடியிருப்போர் வேறு வழியின்றி அவர்கள் நிர்ணயிக்கும் தொகையை கொடுக்க நேரிடுகிறது. இதுபோதாதென்று வாடகையுடன் சேர்த்து அரசு நிர்ணயம் செய்த மிண்சாரத்தொகையைவிட 4.50 காசு என்றால் அதிகபட்சமாக 8.00ரூபாய் வரை வாங்குவதும், முறைவாசல்,

என வாடகை வீட்டில் குடியிருக்கும் மக்கள் ஏன் இங்கு வந்தோம் என்று நினைக்ககூடிய அளவுக்கு வீட்டு உரிமையாளர்கள் நடந்து கொள்வது தான், வீட்டிற்க்கு குடிவருவதற்கு முன்பே ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதிக்கும் உரிமையாளர்கள், முதலில் முன்வைப்பது குடும்பமாக இருந்தால் நான்கு பேருக்கு மேல் இருக்க கூடாது, சொந்தங்கள் வந்தால் ஓரு நாளைக்கு மேல் தங்க கூடாது, குழந்தைகள் இருந்தால் சத்தம் வரக்கூடாது   தங்கள் வாடகைக்காகவே தனியாக சம்பாதிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர், ஆதேசமயம் வீட்டு உரிமையாளர்கள் குடியிருப்போரிடம் ஒப்பந்த பத்திரம் ஏதும் போடுவதில்லை, உரிமையாளர்கள் கட்டளைகளுக்கு ஒருவர்  ஒத்துக்கொள்ளவில்லை என்றால் பேசாமல் வீட்டை காலி செய்ய வேண்டியது தான், அடுத்த நபர் தயாராக இருக்கிறார், நீங்கள் எப்போது கிளம்புவீர்கள் என்பது தான் அவர்களிடம் இருந்து வரும் அடுத்த கேள்வி, எனவே வீட்டு உரிமையாளருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. குடியிருப்போர் குழந்தைகளின் பள்ளி மற்றும் அலுவலக இடம் முதலியவற்றை கருத்தில் கொண்டு அடிக்கடி மாற்ற முடியாத நடை முறை சிக்கல் இருப்பதால் அவர்கள் சொல்வதை கேட்க வேண்டிய சூழ்நிலை தான்  உள்ளது.
25000 சம்பளம் வாங்கினா 10000 வீட்டு வாடகைக்கே போய்விடுகிறது அப்ப குழந்தைகள் தேவையை குடுபத்தையும் மீதி இருக்கும் பணத்தில் மாதம் முழுவதும் நினைக்கும் போதே தோன்றுவது கடன் தான் வாங்க வேண்டும் வேறு வழியில்லை
வீட்டு உரிமையாளர்கள் முன்பெல்லாம்  கல்லூரிமாணவர்களுக்கும்,வேளைக்கு செல்லும் பிரம்மச்சாரிகளுக்கு
(பேச்சுலர்ஸ்) வீடு கொடுக்க முடியாது குடுப்பத்தினருக்குத்தான் தருவோம் என்பார்கள் வீட்டு உரிமையாளர்கள், ஆனால் இப்போதெல்லாம் பேச்சுலர்களுக்கு தான் பெருமளவில் வீடு கொடுக்கின்றனர். மற்றவர்களுக்கு என்றால் யோசிக்கின்றனர் அதுவும் வெளிமாநிலத்தவர்களுக்கென்றால் உடனே பச்சை கொடிதான். இதற்க்கு முக்கிய காரணம் யாரும் அலைய தயாராக இல்லை என்பதால் 1000 அல்லது 2000 அதிகம் என்றாலும் சரி என்று ஒத்துக்கொள்ளும் மனோபாவம். நான்கு பேச்சலர்கள் சேர்ந்து 4000 வாடகை மதிப்புள்ள வீட்டிற்கு 2000 வீதம் 8000 கொடுக்க தயாராக இருப்பதால் இவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதுமட்டுமா இன்று ஒரு வீடு வாடகைக்கு கேட்டுவிட்டு மாலை அட்வான்ஸ் தொகை கொடுக்க வந்தால் அந்த வீடு கிடைக்காது. கையில் பணத்துடன் வரவேண்டும் உடனே குடியேற வேண்டும் என்பது தான் இன்றைய நிலை. செய்தித்தாள்களில் வரும் வரி விளம்பரங்களில் கூட காலை 7 மணிக்கு பிறகு அந்த எண்ணை தொடர்பு கொண்டால் அந்த வீடு முடிந்து விட்டதாக தான் கூறுவார்கள். அந்த அளவுக்கு சென்னையில் வீடு கிடைப்பது கடினமாக இருக்கிறது. இதற்க்கு முக்கிய காரணமாக மக்கள் சொல்வது இடைத் தரகர்கள், இவர்கள் தான் வாடகை உயர்வுக்கு மிக முக்கியமாக கருதப்படுகின்றது. இவர்கள் ஒரு சங்கிலி தொடர்ப்பு போல செயல்பட்டுவருகின்றனர் எங்கு வீடு கேட்டாலும் தேடித்தரும் இவர்களுக்கு வீடு பிடித்திருந்தால் முன்பு வாடகைத்தொகையில் இருந்து 1 அல்லது ½ சதவீதம் என இரண்டு பக்கமும் தரகு பெற்று வந்த இவர்கள் தங்களுக்கு கிடைக்கும் தரகு தொகையின் அளவை அதிகரிக்க இவர்களே போலியான ஒரு டிமாண்ட் ஏற்படுத்தி தற்போது ஒருமாத வாடகை கமிசன் தொகையாக குடியேருபவர்களிடம் பெற்றுவிடுகிறார்கள், மற்றும் வீட்டு வாடகையை உயர்த்தி விடுகிறார்கள்.  குறிப்பாக தரகர்கள் வெளிமாநில மாணவர்களுக்கு (வட மாநிலத்தவர்கள்) தான் அதிக சிபாரிசு செய்கின்றனர் ஏனெனில் அவர்களிடம் அதிக தரகு பணம் வசூழிக்கவும் கேட்டவுடன் அவர்கள் தந்துவிடுகின்றனராம். வீட்டு உரிமையாளர்களும் அந்த எண்ணத்தினை அடிப்படையாக கொண்டே செயல்படுகின்றனர் என்பது தான் நிலவிவரும் உண்மை.
சொந்தவீடு வைத்திருப்பவர்கள் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்றால் அது தவறு ஒருவருக்கு ஒரு வீடு தான் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற சட்டமும் இருக்கிறதா என்பது கேள்விக்குறிதான். பல ஒருத்தரே பல இடங்களில் அடுக்கு மாடி குடியிருப்புகள் என பல சொத்துக்களை வைத்துக்கொண்டு இருப்பதால் தான் மற்றவர்களுக்கும், வரும் சந்ததிகளுக்கும் இடம் இல்லாமல் நடுத்தர மக்கள் அவதிபடுகின்றனர் சொந்தவீடு வாங்க வேண்டுமானால் சொந்த ஊரில் கூட வாங்கமுடியாத நிலை. வீடு வாடகைக்கு இருப்பவர்களுக்கு மட்டுமே அதன் உண்மையான வலி தெரியும்.  இதற்க்கு தீர்வு தான் என்ன?
இதில் தமிழகஅரசின் தலையிட்டு கடுமையான எச்சரிக்கையுடன் கூடிய சட்டத்தினையும் சதுரத்துக்கு இவ்வளவு தொகைதான் வாடகையாக பெற வேண்டும் என்றும் கொண்டுவந்தால் மட்டுமே இந்த நிலை மாறும் வசதிகள் இருந்தால் மட்டுமே, குறிப்பிட்ட வாடகையை வசூலிக்கலாம் என்று வாடகையை நிர்ணயம் செய்ய வேண்டும், இல்லை என்றால் இதற்க்கு  விடிவு  இல்லை.
மக்களுக்காக மக்கள் பிரச்சனைகளை கையில் எடுத்து குறைந்த விலையில் உணவு, குடிநீர் வழங்க முன்வந்த தமிழகஅரசு இந்த வாடகைப்பிரச்சனையை கையில் எடுக்குமா???
கடைசியாக… ஏமாந்தவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டே தான் இருப்பார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை….. 
      
   கோபிநாத்..