வர இருக்கும் கட்டுரை


குளிரூட்டப்பட்ட அறைக்குள் அமர்ந்து கணிப்பொறி உதவியுடன் வாழ்க்கைப்பயணத்தை தொடங்கிவிட்டேன் என்ற எண்ணம் எனக்குள்... ஒருமுறை நான் பனிபுரியும் அலுவலகத்தின் சன்னல் திரையை விளக்கிபார்த்த போது தான் தெரிந்தது... இன்னும் வறுமையின் கரங்களில் சிக்கித்தவிக்கும் மக்கள் வாழும், சாபம் நிறைந்த சமூகத்தில் தான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் என்று!!!

Friday 3 January 2014

சின்ன கற்பனை கதை

அப்பா...

ஏப்பா தம்பி ஒரு ஒருமாசத்துக்கு வெளியூர் எங்காவது போயிட்டு வராலாமுன்னு நினைக்கிறேன் ஏதாவது ஒரு பேருந்தோ அல்லது ரயில் டிக்கெட் வாங்க முடியுமா என்றார்.

மத்திய அரசாங்க வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் யாருடைய தலையீடும், இல்லாமல் இருக்க சிறிய புத்தகக்கடையுடன் அங்கு வரும் இளைஞர்களுக்கு எதிர்காலம் பற்றிய ஆலோசனையும் வழங்கிவருபவர் அப்பா.

ஓய்வு என்ற சொல்லை ஓயாமல் சொல்பவன் ஒழுக்கங்கெட்டவன் என்று சொல்பவர்
அப்பா. அவரே ஓய்வு தேடி செல்கிறாரா ஆச்சரியத்துடன் பார்த்தபடி நின்றேன் !!!

எப்போதும் அப்பாவுக்கு சன்னலோர இருக்கை பிடிக்குமென்பதால் அவர் ஆசையை நிறைவேற்றினேன் அதில் அவருக்கு இன்னும்
கூடுதல் மகிழ்ச்சி அவருக்கு. வண்டி கிளம்ப கொஞ்ச நேர இடைவெளி தான்

நல்ல கோவில்களுக்கு போங்க, சொந்தகாரங்க வீட்டுக்கு போங்க நிம்மதியா இருக்கும் என்றேன்

சிறீது யோசனையுடன் என்னைப் பார்த்த அவர் புன்னகைத்துக் கொண்டு ஏப்பா...

இது ஓய்வுக்கானபயணம் இல்ல, தொழிநுற்ப்பத்தால நிறைந்து கிடக்கும் பட்டனத்தில் போய் ஏதாவது கத்துக்கிட்டு வந்தா
இங்கெ இருக்கிற இளைஞர்கள்  நாலு பேருக்காவது வேலை
வாய்ப்பு கொடுக்கலாம்ல அதுக்கானத் தேடல் தான்யா…

இந்த வயசுலேயும் நாலு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பைத்தரணுமின்னு தேடல் பார்வையோடு பயணிக்கும் என் அப்பா
எப்ப டா லீவு கிடைக்கும் வீட்டுல படுத்து தூங்கலாமுனு கனவு காணும் என்னை பெற்ற தந்தை நீ தானா என்று திகைத்துப்போனேன்.  விடுமுறை என்ற வார்த்தையை மறந்துபோனவனாய்...