வர இருக்கும் கட்டுரை


குளிரூட்டப்பட்ட அறைக்குள் அமர்ந்து கணிப்பொறி உதவியுடன் வாழ்க்கைப்பயணத்தை தொடங்கிவிட்டேன் என்ற எண்ணம் எனக்குள்... ஒருமுறை நான் பனிபுரியும் அலுவலகத்தின் சன்னல் திரையை விளக்கிபார்த்த போது தான் தெரிந்தது... இன்னும் வறுமையின் கரங்களில் சிக்கித்தவிக்கும் மக்கள் வாழும், சாபம் நிறைந்த சமூகத்தில் தான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் என்று!!!

Tuesday 31 March 2015

ஏப்ரல் 1 மட்டுமா முட்டாள்கள் தினம்…

இன்று ஏப்ரல் ஒன்றாம் தேதியாம், ஏப்ரல் 1ம் தேதி முட்டால்கள் தினமாம், விடிந்ததும் நம்மை ஏமாற்ற கங்கனம் கட்டிக்கொண்டு காத்திருப்பவர்களை நாம் முந்திக்கொண்டு முட்டாள்களாக வேண்டும். இன்று ஒருநாள் ஏமாந்து விட்டால் வருடம் முழுதும் ஏமார்ந்து கொண்டே தான் இருப்போம். இதனை நினைத்தால் சிரிப்பதா இல்லை நீங்கள் வருடத்தில் 364 நாட்களும் ஏமாறுவதே இல்லையா என்று நக்கலாக கேள்வி கேட்பதா என்று தெரியவில்லை.
ஏன் இந்த நாளை மட்டும் குறிப்பாக முட்டால்கள் தினம் என்கிறோம் ­… கேள்வி எழுந்தது ஆனால் பதில் கிடைக்கவில்லை. சரி யாரிடம் கேட்பது இணையத்தை மொய்த்து பார்த்தேன் அந்த காலத்தில் ஒருவரை மனதலவில் எத்தைய வலிமையுடையவர், புத்தி அலைபாய்ந்து கொண்டிருக்கிறதா என்பதை சோதிக்க அவர்களுடன் இருப்பவர்களே கண்ணை மூடி யார் என்று கண்டுபிடிக்க சொல்வது முதுகுக்கு பின் சாயங்களை அடித்து ஏமாற்றுவது என மனிதர்களை மனிதர்களே சோதித்து கொண்டனராம்.
ஆனால், காலம் மாறிவிட்டதல்லவா பொழுதுபோக்கு மனிதர்களுக்குள் பொழுது விடிந்தால் பொய் பொறாமை, ஏமாற்று, சித்து வேளைகளாக மாறிவிட்டது.
சுமார் நினைத்துப்பார்ப்போம் பக்கத்துவீட்டுக்காரரிடம் பந்தா காட்ட வேண்டும் என்பதற்காக 500 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு டி நகரில் உள்ள பெரிய ஏசி சோருமில் 1200 கொடுத்து ஒரே ஒரு சர்ட் வாங்கிட்டு வெளியே வருவோம் பக்கத்தில் இருக்கிற பிளாட்பார்ம் கடையில அதே டீ சர்ட் 250 ரூபாய்க்கு வித்துகிட்டு இருப்பான் கேட்டால் சோருமில் இருப்பது பிராண்டட் சொல்லி நாம் அடைந்த ஏமாற்றத்தை மெச்சிக்குவோம். தினமும் காலையில் எழும் போதே டிவில நடிகை ஒருவர் கோயம்பேட்டில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் அறை மணி நேரத்தில் நந்தா சிட்டி பக்கத்தில் பஸ் வருது, எதுத்தாப்ல ஏர்போட் இருக்கு, பக்கத்துல பள்ளிக்கூடம் இடம் வாங்கினா கொடம் குடுக்குறோம் சொல்லி கூப்பிடுறாங்க அவங்க கூட போனா திருச்சி சமயபுரம் பக்கத்துல கொண்டு போய் நிறுத்தி இது தாங்க நாங்க சொன்ன இடம்னு பக்காவா தலையில கட்டி அனுப்புவாங்க அதையும் வாங்கி ஏமாறுபவர்கள் பலர்.
தினம் தினம் தொலைக்காட்சிலையும், நீயூஸ் பேப்பர்லையும் பக்கம் தவறாம செய்திகள் வரும் சீட்டு நடத்தி மக்களை ஏமாற்றி பல கோடி சுருட்டல் மக்கள் கண்ணீர்னு அதப்படிச்சிட்டு அடுத்த தெருவுல புதுசா ஆரம்பிச்ச சீட்டு கம்பெனில பணத்த போட்டு ஏமாறுவது வழக்கம் தானே அதிகம். ஏமாற்றுபவர்களை விட ஏமாறுபவர்கள் தான் முட்டால்கள் என்று தமிழ் சினிமா ஒன்றில் சொல்ல கேட்டிருக்கிறோம் பார்த்திருக்கிறோம் ஆனால், விழித்திருக்கிறோமா என்பது கேள்வி குறிதான்.
ஏமாற்றுபவர்களை கண்டால் கோபமும் ஆத்திரமும் வருகிறது. அப்பாவிகளை எத்திப்பிளைப்பு நடத்தும் கேடுகெட்டவர்களை நடுரோட்டில் நிற்க வைத்து சாட்டையால் அடித்தால் கூட ஏமாந்தவர்களின் ஆத்திரம் தீராது. பாட்டிக்காட்டில் 10 கிளாசு முடிச்சிட்டு விவசாயம் பார்த்து நிம்மதியா நாளை கழித்துக்கொண்டிருப்பவனிடம் பணத்தாசையை காட்டி சுயலாபத்திற்காக வெளிநாட்டு மோகம் காட்டி மனைவியின் தாலி முதல் தாயிடம் இருக்கும் கடைசி மோதிரம் வரை சேட்டிடம் விற்று ஏமாறுகிறோம். அவன் படிக்காதவன் சரி எம்பிஏ வரை படித்துவிட்டு சோறு போட்ட நிலத்தை விற்று பெத்தவர்களை ரோட்டில் விட்டு பணத்தை கொண்டு ஏஜெண்டிடம் கட்டிவிட்டு ஏதோ எதுக்கோ காத்துக்கிட்டிருக்கிற மாதிரி தினம் தினம் செல்போனை பார்த்துக்கொண்டிருக்கும் இளசுகள்
கோழிமுட்டைக்கு 1000 என்று கூறிய கோமாளிகளிகளிடம் வரிசையில் நின்று கோட்டை விட்டு கோழிகளுக்கும் தீவனம் கிடைக்காமல் வாங்கிய கடனுக்கு வழி தெரியாமல் திண்டாடும் அறிவாளிகளாகவா
 மகனை பெரிய காலேஜ்ல சேர்த்துவிட்டோம் இனி அவன் பெரிய இஞ்ஜினியர், டாக்டர், கலெக்டர்னு என்னி பூரிச்சு போகும் பெற்றோர்களை ஏமாற்றும் நம் எத்தனை பேர். செல்போனில் பேசிக்கொண்டிருக்கும் மகள் யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறாள் என்றே தெரியாமல் செல்போனில் பேசுவதை நினைத்து பூரிப்படைந்து ஏமார்ந்து கிடக்கும் தாய் தந்தைகள் எத்தனை பேர். தேர்தல் நேரத்தில் மட்டும் தொகுதியில் சந்துபொந்துகளிலெல்லாம் இருக்கும் வீடுகளை தேடித்தேடி வந்து வாக்கு கேட்கும் அரசியல்வாதிகளையும் அவர்களின் வாக்குறுதிகளையும் நம்பி வாக்களித்து வெற்றி பெறச்செய்துவிட்டு, அவர் சொகுசுக்காரில் கருப்புக் கண்ணாடியை கூட இறக்கிவிடாமல் போவதை பார்த்து எமார்ந்து நிட்க்கிறோம். குடும்பம் நடுத்தெருவில் இருப்பதை கண்டு கொள்ளாமல் கட்சி கட்சி தலைவர் என்று தெருத்தெருவாய் திரியும் போஸ்ட்டர் ஒட்டி தலைவனுக்காக தீக்குளிக்கவும் தயாராக இருக்கும் தொண்டனுக்கு ஒன்றுமே இல்லை நேற்று வந்த மகராசிகளுக்கு துனைத்தலைவர் பதவி என்றால் இதில் முட்டால் யார்..
கவர்ச்சியான விளம்பரத்தை பார்த்து குழிக்க பயண்படுத்தும் சோப்பு முதல் தலை சீவ பயன்படுத்து சீப்பு வரை எமாற்றம். நீதி கிடைத்துவிடும் என்று நம்பிக்கையில் நீதிபதியையும், போலீஸ்சிடம் போனால் பிரச்னை தீர்ந்துவிடும் என்று நம்பி இலவு காத்த கிழி போல் காத்துக்கிடக்கிறோம்.
கொள்ளையடிக்கிறான் என்று தெரிந்தே பிரோவில் பணத்தை வைத்துவிட்டு வெளியூர் செல்வோம். அண்ணன் சொத்துக்கு ஆசைப்பட்டு இருக்கும் சொத்தையும் இழந்தவிட்டு புலம்புவது. இதனால் நாம் திறமைசாளிகள் என்பது பொருள் அல்ல தூங்கிக்கொண்டிருக்கும் போதும் கால் கட்டை விரலை ஆட்டிக்கொண்டு தான் துங்க வேண்டும். திறமைசாளிகளாக இருப்பதை விட அறிவாளிகளாகவும் இருப்பது எதிர் கால வாழ்க்கைக்கு அவசியமானது.
ஆகவே, இந்த எப்ரல் 1 முட்டால்கள் தினமாகவே இருக்கட்டும் இருக்கட்டும் இனி வரும் நாட்களில் முட்டால் என்ற பெயரை மட்டும் மறைந்து போக செய்வோம்.

கோபி…

Wednesday 2 July 2014

கட்டுரைகள்


ஐ.டீ, இன்ஜினியரிங் படித்தவர்கள் வருகையால் கலையில் படித்தவர்கள் நிராகரிக்கப்படுகிறார்களா?... 
ஐ.டீ (IT InformationTechnology) நம்மில் பெரும்பாளானோர் படிக்கும் போதே தேர்வு செய்யக்கூடிய துறைகள் அறிவியல்துறை,மருத்துவம், இன்ஜினியரிங் துறை தான். ஆனால் கலை மற்றும் அறிவியல் (Arts Group) எடுப்பவர்கள் ஏழானமாகத்தான் பார்க்கபபடுகிரார்கள். உண்மையைச் சொல்லப்போனால் ஆர்ட்ஸ் படிப்பவர்கள் தங்கள் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும் அதே சமையம் அதிக வேலை வாய்ப்புகள் இங்கு தான் இருக்கிறது (சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால்). மருத்துவம், அறிவியல், இன்ஜியரிங் போன்ற கல்லூரிகள் இயங்குவது 10 மணி நேரம் காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை படிக்கும் போதும் ஓய்வு இருப்பதில்லை முடித்துவிட்டு வேலைக்கு சென்றால் அங்கும் 10 முதல் 12மணி நேரம் வரை மாலை வீடு திரும்பியது கலைப்பு வந்தவுடன் சாப்பாடு தூக்கம் ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கை இப்படி வேலை செய்வதனால் என்ன பயன். அதிகமான பொறுப்பு அப்போ மற்றவர்களுக்கு பொறுப்பு இல்லையா? என்று கேள்வி வரும் கோபத்தை அடக்கிவிட்டு மேலும் படிங்க.
ஐ.டீதுறையில் வேலை கிடைத்தவுடன் அதிகசம்பளம் வேறு என்ன வேண்டும் வாழ்க்கையே பணம் தானே முதலில் என்ன வேண்டும் எங்காவது ஒரு பக்கம் வீட்டுமனை வாங்க வேண்டும், வீடுகட்ட வேண்டும், கார் வாங்க வேண்டும்,க்ரேடிட் காட் வாங்க வேண்டும் இவை உடனடியாக கிடைக்க வேண்டுமென்றால் நிறுனம் தங்கள் பணியை நிறந்தரமாக்க வேண்டும் அதற்க்கு இரவு,பகல் பாராமல் வேலைப்பார்க்க வேண்டும். இதில் பெண்களும் அடங்குவர் இப்படி பார்த்தால் தான் வங்கி லோன் தரும் ஒட்டு மொத்தமாக எல்லாவற்றிலும் கடன் வாங்கிக்விட்டு அந்த கடனை அடைக்க முடியாமல் வேலைப்பளு அதிகமாக இருப்பினும் வேறுவழி இல்லாமலும் பலர் மன உளைச்சலுக்கும் மத்தியில் வேலைக்கு சென்று வருகின்றனர்.
இதற்கிடையில் கனவன் மனைவி இருவரும் வேலைக்கு சென்றால் தான் மொத்த கடைனையும் அடைக்க முடியும் என்ற நெருக்கடி வேறு என்ன செய்வது கட்டாயத்தின் பெயரில் வேலைக்கு செல்லும் பெண்கள் சந்திக்கும் இன்னல்கள் வேறு. பல நிறுவனங்களில் குறித்த நேரத்திற்க்கு உள்ளே செல்லவில்லையென்றால் சம்பளத்தில் பிடிப்பு (fine) போடப்படும் அல்லது அவர்களது பதிவி உயர்வுக்கு தடையாகும் வகையில் மதிப்பீடு குறைக்கப்படும்.  ஆனால் பணி முடிந்து வெளியே எப்போது வருவார்கள் என்று சொல்ல முடிவதில்லை. 10 முதல் 12மணி நேரம் வரை வேலை செய்யும் இவர்கள் குறித்த நேரத்தில் வெளியே அனுப்படுவதில்லை.

சரியான நேரத்திற்க்கு உணவு என்பது கேள்விக்குறி தான். அங்கு கிடைக்கும் ஏதோ ஒன்றை பீட்சா, பர்கர், சான்வெஜ் போன்றவற்றை சாப்பிடுகிறார்கள் இதை சாப்பிடுவதன் மூலம் அவர்கள் எடை கூடும் பின் நாட்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை சிறிதும் மனத்தில் கொள்ளவேண்டிய அவசியம் இல்லாதது போலத்தான் இவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் பாதியை மருத்துவர்களுக்கு கொடுக்கவும் தயாராகத்தான் இருக்கிறார்கள் போல் தெறிகிறது.
கை நிறைய சம்பளம் கிடைக்கின்றதே என்பதற்காக பலர் இத்துறையில் தங்களது பெரும்பாலான சந்தோஷத்தை இழந்து தவிக்கின்றனர் என்பதுதான் உண்மை. தங்கள்பிள்ளைகளிடமும் உற்றார் உறவினர்களிடமும் கூட நேரத்தைசெலவழித்து மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

இது போன்றவர்களுக்கு விரைவிலேயே மனஅழுத்தம் வந்து விடுகின்றது. இந்த துறைகளில் வேலைப்பார்ப்பவர்கள் அதை ஐடீ மற்றும் இன்ஜியரிங் துறையை விட்டுவிட்டு கலை& அறிவியல்துறை சார்ந்த கனிதம்,ஊடகம்,நிருவன நிர்வாகம் போன்ற வேலைக்களுக்கு படையெடுக்க துவங்கியுள்ளனர் இதனால் இதற்காகவே படித்துவிட்டு அங்கு பணியில் இருப்பவர்களுக்கு நிரந்தரமான வேலை இல்லை என்று சொல்லும் அளவிற்க்கு உருவாகியுள்ளது.

பல வேலைகளுக்காகவே படித்துவரும் இளைஞர்களின் நிலை கேள்விக்குறியாகும் நிலை தான்.
நானும் உட்பட?

ஐடி துறையில் வேலை ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான வேலையில் இருப்பது என்பது 'வரம்' என்று சொல்வதை விட 'சாபம்' என்று தான் சொல்ல வேண்டும்.
இருப்பினும் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையை படிப்பின் மூலம் தான் தேர்வு செய்கிறோம் அது பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அதிலேயே முயற்சி செய்து அவரவர் வாழ்க்கையின் வெற்றிக்கு வித்திடலாமே…   

Saturday 28 June 2014

கட்டுரைகள்



தள்ளுபடி விலையில் மருந்தகங்கள் 
டுமையான விலையேற்றங்கள், தவிர்க்க முடியாத தனியாரின்
விலைநிர்னயக்கொள்கையில் எடுக்கப்பட்ட முடிவு தான் அரசாங்க மே அனைத்து தொழில்களையும் எடுத்து நடத்துதல் என்ற முடிவு இது அனைவராலும் வரவேற்க்க வேண்டியது கடந்த ஆட்சியில் மக்கள் நலன் என்ற பெயரில் வெறும் பலங்களை மட்டுமே கட்டிய பெருமை திரு கருணாநிதிக்கு உண்டு இது பொதுமக்கள் நலனா இல்லை அவரது மக்கள் நலனா என்பது அனைவருக்கும் தெரியும், அதை காட்டிலும் இந்த ஆட்சி நல்ல ஆட்சி என்றே சொல்லலாம்.

அதைப்பற்றி நாம் பேசவும் இல்லை சான்றும் கொடுக்கவில்லை.  மக்கள் நலத்திட்டங்கள் என்று திடிர் திடிர் எனத்தோன்றும் அம்மா காய்கறிக்கடை, அம்மா பல்பொருள் அங்காடி, அம்மா உணவகங்கள், அம்மா குடிநீர் தற்போது அம்மா மருந்தகங்கள் என புதிதாக தொடங்கப்படும் இவை மக்கள் நலன் கருதி தொடங்கப்படுகிறதா அல்லது சேவை மனப்பனப்பாண்மையுடன் செயல்படுகிறதா என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.
தற்போது தொடங்கப்பட்டுள்ள மருந்தகள் எந்த விதமான மக்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் செயல்படும் 10 சதவீகிதம் தள்ளுபடி என்றாலும் கண்டிப்பாக உயர்மட்டத்தில் இருப்பவர்கள் இங்கு வரமாட்டார்கள் அவர்கள் தனியார் மருத்துவமனைகளை நாடித்தான் செல்வார்கள்  நடுத்தரவர்க்கத்தினர் அங்கு சென்றாலும் அடித்தட்டு மக்களுக்கு இந்த மருந்தகங்கள் மூலம் பயன் கிடைக்குமா என்றால் அது நிட்சயம் சாத்தியம் இல்லை.
இவர்கள் அரசாங்க பொதுமருத்துவமனைகளில் இலவசமாக வைத்தியம் பார்க்கும் அடித்தட்டு மக்களும், தமிழக அரசால் தொடங்கப்பட்ட உணவகத்தில் 10 ரூபாய்க்கு மூன்று வேளையும் சாப்பிடக்கூடிய மக்களுக்கு 10 சதவீத கழிவுடன் கூடிய மருந்தகங்கள் பயந்தரக்கூடியது தான் என நியாப்படுத்தும் அரசியல் தலைவர்களிடம் கடந்த 2011ஆம் ஆண்டு ஆட்சிப்பொறுப்பிற்க்கு வந்த அ.தி.மு.க வெளியிட்ட அறிக்கையில் உள்ள நலத்திட்டங்களை இன்னும் முழுவதுமாக நிறைவேற்றாத நிலையில் இவர்களின் இந்த முயற்ச்சி யாருக்கு பயன் தரும் என்பதே கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. தமிழக்த்தில் இருக்கும் அனைத்து அரசாங்க பொதுமருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதி இல்லை,அடிப்படை நோய்களான காய்ச்சல் வயிற்று வலி போன்ற வற்றிக்கு தான் இந்த மருத்துவமனைகளில் இன்னும் சிகிச்சைகள் நடந்துக்கொண்டிருக்கிறது உயர் மருத்துவ சிகிச்சைகள் அனைத்துமே தனியார் மருத்துவமனைகளுக்குத்தான் செல்கிறது, இவற்றில் எல்லாம் கவனம் செலுத்தாத தமிழக அரசு இது போன்ற தொழில் துவங்குவதன் மூலம் மக்களின் ஆதரவை தங்கள் வசம் தக்கவைக்கு நோக்கமாவே தெரிகிறது.
உணவகம் மகளிர் சுயஉதவி குழு மூலம் நடத்தப்படுகிறது,
தண்ணீர் தயாரிக்க தொழிற்சாலை உருவாக்கப்பட்டுள்ளது,
உப்பு அதே போல் இயங்குகிறது
Ranbaxy, Dabur, Pfizer, johnsHopkins Baxter, Noartis போன்ற நிறுவனங்கள் தற்போது இந்தியா முழுவதும் மருந்துகள் தயாரித்து விற்பனை செய்துகொண்டிருக்கும் நிலையில் தமிழக அரசு இதற்க்கும் தனியாக ஒர் தொழிற்ச்சாலை துவங்க திட்டமிட்டுள்ளதா அல்லது இவர்களிடம் மொத்தமாக கொள்முதல் செய்யத்திட்டமிட்டுள்ளதா, இருந்தாலும்
மெட்ப்ளஸ் அப்போலோ போன்ற மருந்தகங்களில்  10 சதவீதம் கழிவு கொடுக்கப்படும் போது 10 சதவீத கழிவுடன் அரசு மருந்துகங்களிலும் அதே 10 சதவிகிதம் கழிவு கொடுப்பதில் மக்களுக்கு என்ன பயன் இருக்கிறது அவ்வாறு பார்க்கும் போது இது சேவையாக தெரியவில்லை தனியார்துவத்திற்க்கு எதிரான வியாபார நோக்கமாகவே தெரிகிறது. அவ்வாறு   விற்குமானால் பொதுமருத்துவமனைகளில் இலவசமாக கொடுக்கப்படும் மருந்து மாத்திரைகள் எதற்காக? அதை வாங்கும் மக்கள் எப்படி இந்த மருந்தகங்களில் மாத்திரைகள் வாங்கமுடியும் இதை எல்லாம் 1 ரூபாய் இலாபத்திற்க்கு விற்க தமிழக அரசு எந்த அடிப்படையில் செயல்படுகிறது ஏற்கனவே வாங்கிய கடன்தொகை முழுவதுமாக தமிழக அரசு அடைத்துவிட்டதா இதுவும் தோற்றுப்போனால் பால்விலை, பேருந்து விலை யேற்றம் என்று மக்கள் தலையில் தானே வந்து விடியும், இதற்க்கு பதில் தனியாரிடம் கொடுத்து அந்த தொழிற்சாலைகளை அரசின் கட்டுப்பாட்டில் எடுத்து கொண்டு தமிழகத்தில் இருக்கும் அத்தியாவசிய பிரச்சனைகளை தீர்க்க வழி செய்யலாமே…

Friday 27 June 2014

கட்டுரைகள்




எங்கள் வாழ்க்கையும் மீட்டர் தான்





ஆட்டோ ஓட்டுநர் என்றாலே நம் பார்வையிலும் மனதிலும் சட்டென்று உதிப்பது. அவர்கள் மக்களை ஏமாற்றுபவர்கள், அவர்கள் பொது மக்களிடம் அதிகமாக கட்டணம் வசூலிப்பவர்கள், ரொடித்தனங்களில் ஈடுபடுவர்கள், பொறுப்பில்லாமல் கண்டபடி வண்டி ஓட்டுபவர்கள் போன்ற குற்றச்சாட்டுகளை அனைவராலும் சுமத்தப்படும் ஒர் குற்றச்சாட்டு, அதற்காக ஆட்டோகாரர்கள் அனைவருமே நல்லவர்கள் என்று சொல்லவில்லை. பாதிக்கப்படும் மக்களில் பெரும்பாண்மையாக விரட்டப்படுவது இவர்கள் தான்
இவ்வளவு கஸ்டத்திலும் இவர்களை  புதிதாக விரட்டத்தொடங்கியிருக்கிறது தான் ஆட்டோமீட்டர் உன்மையாக சொல்லப்போனால் விலையேற்றத்தில் இருந்து பள்ளிக்கூடங்கள் வரை எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் யாரை பதிக்கிறதோ இல்லையோ நடுத்தரவர்க்கத்தினரை பாதிக்கும் அதிலும் ஆட்டோ ஓட்டுநர்கள் தான் இதில் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பது அரசியல்வாதிகள் முதல் காவல்துறையினர் வரை எல்லாருக்கும் தெரியும். இருந்தும் ஒவ்வொரு முறையும் ஓரங்கட்டப்படுவதும் இவர்கள் தான் இது ஒவ்வொரு முறையும் நாம் காணும் காட்சி இது போலியானால் நம் கண்கள் குறுடாக்கப்பட்டுள்ளன என்பது தான் உண்மை
ஒரு முறை சற்று யோசித்துப்பார்த்தாலும் ஒருதலைபட்சமான பார்வை என்று தோன்றும் ஆனால் இன்றைய நிலையில் 1 லிட்டர் பெட்ரோல் விலை 74ரூபாய்22 காசுகள் இது எப்போது உயரும் என்றே தெரியாத நிலையில் தேநீர் விலை 7-ரூ, 1 லிட்டர் அரசாங்க குடிநீர் தனியார் குடிநீர் 20க்கும் விற்பனை செய்துக்கொண்டிருக்கிறது. சரி இதையெல்லாம் பொருத்துக்கொண்டாலும் கூட மிஞ்சிப்போனால் ஆட்டோக்காரன் எவ்வளவு அதிகமாக சம்பாதித்துவிட முடியும் இந்த சென்னையில் ஏறக்குறைய 15,000 ஆட்டோக்கள் இருக்கும் அவர்கள் நாள் ஒன்றிற்க்கு 10 சவாரி போனால் 600 முதல் 700 வரை கிடைக்கும் அதிலும் தொலைதூரம் சென்றால் மட்டுமே 1000 ரூபாயை தொட முடியும். இதில் காவல்துறை மறித்தால் அவர்களுக்கு கையூட்டு, தினமும் வண்டி வாடகை, குடும்பசெலவு, வண்டி பாரமரிப்பு அவர் செலவு இருதியில் என்ன மிச்சம் கந்துவட்டிக்கு கடன் வாங்குவது தான். இது போக கந்துவட்டியிலும் எஞ்சிய தொகையில் தான் குடும்பத்தை பார்க்க முடியும். இவ்வளவு நெருக்கடிக்கு மத்தியிலும் வேறுதொழில் தெரியாத இவர்களின் நிலை கேள்விக்குறி தான் வருடம் முழுவதும் அரசு அலுவலகங்களுக்கோ, காவல் நிலையங்களுக்கோ மக்கள் பொருத்தமான துணை இன்றி போக அஞ்சும் சூழ்நிலையில் தமது செல்ல பிள்ளைகளையும், வயது வந்த பெண்களையும் ஆண்டு முழுவதும், பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் ஆட்டோ டிரைவர்களை நம்பி அனுப்பி வைக்கின்றனர் என்பதும் மக்கள் சொந்த கோரிக்கைகளுக்காக மட்டும் அல்லாமல் சமூக அக்கறையுடனும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கான கட்டணத்தை அரசு தீர்மானிக்கும் போது கோடிக்கணக்கான மக்களின் அத்தியாவசிய பெட்ரோல் டீசல் விலையை தனியார் முதலாளிகள் தீர்மானிக்க மத்திய அரசு அனுமதிக்கிறது இதனை கண்டிக்க ஒருவரும் இல்லை.
ஆட்டோக்கான கட்டணத்தை தீர்மானித்து அதனை கண்காணிக்கவும் அதிகாரிகளை நியமிப்பதும் பல பகுதிகளில் நடந்துவருகிறது ஆனால் இவ்வளவும் செய்யும் அரசே 1 லிட்டர் பெட்ரோல் மீது கலால்வரி, சேவைவரி, விற்பனைவரி, மாநிலவரி உள்ளிட்ட மறைமுக பல்வேறு வரிமூலம் ரூ 50 வரை வரிபோட்டு சுரண்டுவதை  கேட்க யாரேனும் உண்டா. ஏன் தமிழக அரசு இந்த வரிகளை ரத்து செய்து மக்களுக்கு அத்தியாவசியமான இந்த எரி பொருள் விலையை குறைக்க முன்வரவில்லை. பெட்ரோல், டீசல் விலை அவ்வப்போது தன் இஸ்டத்திற்க்கு ஏற்றுகின்றன அதை கேட்காத அரசு ஏன் ஆட்டோ ஓட்டுனர் 50 ரூபாய் சேர்த்து கேட்டால் அதற்க்கு நடவடிக்கை எடுக்க முன் நிற்க்கிறது. எரி பொருள் விலை உயரும் போது மீட்டர் விலையையும் ஏற்றுவதற்க்கு ஒப்புக்கொள்ளுமா இந்த அரசு.
மக்களை ஏமாற்றி கொள்ளை அடிக்கும் அரசியலவாதிகள், அரசை ஏமாற்றி கொள்ளையடிக்கும் தொழில் அதிபர்கள், தனியார் முதலாளிகள் என அனைவரையும் விட்டு விட்டு 5க்கும் 10க்கும் சிரமப்படும் மக்களிடம் தன் வீரத்தை காட்டுகிறதா அரசு
ஒரு சாதாரன ஆட்டோ ஓட்டுனர் மக்களை ஏமாற்றி சொந்த வீடு வாங்கிவிட்டாரா அல்லது பெரிய கட்சி துவங்கிவிட்டாரா இன்னும் அதே காக்கி சட்டையுடன் வேகாத வெயிலில் வயித்துக்கும், குடும்பத்திற்க்குமாக உழைத்துக்கொண்டிருக்கும் இவர்களை அடிப்பதன் காரணம் தான் என்ன? காலை, மாலை, இரவு என அழைந்து திரிந்து வீட்டிற்க்கு வரும் இவர்கள் பெற்ற பிள்ளைகளை பார்த்து அவர்களுடன் நேரம் ஒதுக்ககூட முடியாமல் எந்த நேரத்திலும் கஷ்டத்தின் பிடியிலேயே வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர்.

இதற்காக 100 ரூபாய் சேர்த்து வாங்குவது தப்பில்லை என்று சொல்லவில்லை, அதுவும் மக்களின் தலையில் தான் விடிகிறது ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படுவது நடுத்தரமக்கள் தான் என்பதை சிந்திக்க வேண்டும் ஒருவர் பாதிப்பில் மற்றொருவர் ஆதாயம் அடையாமல் அனைவருக்கும் பாரபட்சமின்றி செயல்பட மறுக்கும் இந்த சனநாயகத்தை என்ன வென்று சொல்வது.

ஒருபுறமிருக்க செய்தி ஊடகங்கள் அதிகாரிகளைப்பற்றியும் அவர்கள் செய்யும் தவறுகளைப்பற்றியும ஒளிபரப்புவதும் இல்லை மாறாக நடுநிலை,உண்மை, என சொல்லிக்கொண்டு உன்மையை மறைத்து தான் செயல்படுகிறது , இது பற்றாக்குறைக்கு அலைக்கற்றை ஊழல், தாதுமணல் கொள்ளை என பல லட்சம் கோடி கொள்ளையடித்தவர்களை வெளிப்படையாகவே உல்லாச வாழ்க்கை அனுபவிக்கின்றனர். இந்த குற்றவாளிகள் ஒரு போது இதுவரை தடுக்கவோ, தண்டிக்கவோ இல்லை. இவர்களின் கொள்ளை அதிகாரப்பூர்வமாகவே நடக்கிறது அதை கண்கொண்டுக்கொள்வதை தவிர்க்கிறது ஊடகம்.

இது ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மட்டும் அல்ல அனைத்து உழைக்கும் மக்களின் வாழ்வை எந்த வகையில் சீரழிக்கலாம் என்று காத்துக்கொண்டிருப்பது போலவும் நடுத்தரவர்க்க மக்களின் வாழ்வாதாங்களை நசுக்குகின்றன. இந்த அரசாங்கமும் பணக்கார வர்க்கமும் இவர்களை தகர்க்க வழியே இல்லையா?...