வர இருக்கும் கட்டுரை


குளிரூட்டப்பட்ட அறைக்குள் அமர்ந்து கணிப்பொறி உதவியுடன் வாழ்க்கைப்பயணத்தை தொடங்கிவிட்டேன் என்ற எண்ணம் எனக்குள்... ஒருமுறை நான் பனிபுரியும் அலுவலகத்தின் சன்னல் திரையை விளக்கிபார்த்த போது தான் தெரிந்தது... இன்னும் வறுமையின் கரங்களில் சிக்கித்தவிக்கும் மக்கள் வாழும், சாபம் நிறைந்த சமூகத்தில் தான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் என்று!!!

Thursday 26 June 2014

விமர்சனம்



யாரை தூக்கி வைக்கும் படம் ”பிறகு”



 





WithYou WithoutYou  தமிழில் ”பிறகு” என்று மொழிபெயர்ப்புடன் திரையிடல் நேற்று RKV Studioவில் திரையிடப்பட்டது. படம் வரும் முன்பே தடை செய்தது அது அருமையான படம் தமிழர்கள் பார்க்க வேண்டிய படம் என்றேல்லாம் முகநூலில் பதிவிடப்பட்டிருந்தது, நாமும் அங்கு விரைந்தோம் 22 மணி நேரத்தில் அரங்கேற்றப்பட்டது என்றார் தமிழ் ஸ்டுடியோ அருண், இந்த வலை பூ யாரையும் யார்ந்து இயங்கவில்லை என்பதை இந்த விமர்சனம் எழுதுவதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.
முன்னோட்டம்
இலங்கை இயக்குநனர் பிரசன்ன வினோதகே அவர்களினால் எடுக்கப்பட்ட ஒரு மணி நேர திரைப்படம். அங்கே இருக்கும் தமிழ் இனம், இனக்கலப்பு செய்வதன் மூலம் தான் தமிழர்களுக்கு தீர்வு என்பதனை தீர்க்கமாக சொல்லியிருக்கிறார். இதை ஈழத்தமிழர்கள் ஏற்றுக்கொண்டாலும் தமிழகத்துதமிழர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள் என்பது திரையிடல் முடிந்தது அரங்குகிற்குள் எழுப்பட்ட குரல்கள்
விமர்சனம்
படத்தின் துவக்கத்தில் ஒரு மலைமுகட்டின் ஒரு வீட்டின் சன்னலில் வாடிய முகத்துடன் ஒரு பெண் நிட்கிறாள், அந்த பெண்ணின் முகமே சொல்லிவிட்டது இது நமக்கான கதை அல்லவென்று.
யாழ்பானத்தில் இருந்து அகதியாய் வந்து மலையகதமிழர்களிடம் தஞ்சமடையும் பெண். தனக்கு அடைக்களம் கொடுத்தவர்களுக்கு பாரமாக இருக்ககூடாது என்பதற்க்காக அவள் வேளை தேடுகிறாள் அதுவரை அவள் தன்னிடம் இருக்கும் நகைகளை அடகு வைக்க செல்லுகிறாள் அவளை பார்த்த சிங்கள அடகுவியாபாரிக்கு அவளை பிடித்துவிடுகிறது அதனால் அவளது நகையுடன் இரசீது இல்லாமல் பணம் தருகிறான் அதை வாங்கமறுக்கும் அவளிடம் உன் உதட்டிலும் கண்களிலும் ஒரு நெருப்பு இருக்கிறது என்கிறான், அந்த பெண்னின் மனம் சனப்படுகிறது அவள் இருப்பினும் இருதியாக அவள் ரசீது வாங்கிக்கொண்டு தான் செல்கிறாள்,
 அவளுக்கு மலையக குடும்பம் ஒரு வயதான தொழில் அதிபரை திருமணம் செய்து வைக்க திட்டமிடுகிறது. அவளுக்கு அது பிடிக்கவில்லை (இயக்குனர் மலையக மக்கள் பணத்தாசைபிடித்தவர்கள் என்று சொல்லவருகிறார? அல்லது வடக்கு பகுதியினரை அவர்கள் வெறுக்கின்றனர் என்கிறாரா?)
அங்கிருந்து தப்பிவந்து பேருந்து நிறுத்ததில் நிற்க்கும் அந்த பெண்ணிடம் சிங்கள அடகுகடைகாரர் வீட்டில் வேலைபார்க்கும் வயதான பாட்டி(50வயது மதிக்கத்தக்கவர்) அந்த பெண்ணை சிங்கள அடகு கடைக்காரரை திருமணம் செய்துகொள்ளுமாறு அவள் மனதை மாற்றுகிறார். (இனக்களப்பு செய்ய தமிழர்களே தயாராக இருக்கிறார்கள் என்று சொல்ல வருகிறார?)
அந்த பெண் உடனடியாக சமபதம் தெரிவிக்கிறாள். சிங்களவன் அவன் வீட்டிற்க்கு கூட்டிவருகிறான் படுக்கையில் அந்த தமிழ் பெண் மீது சிங்களவன் ஆடையேதும் இல்லாமல் படுத்திருக்கிறான் அவள் கதறுவது போல் சப்தம் வருகிறது. திருமணம் என்பது தமிழர்களின் வாழ்வில் மிக முக்கியமான ஒரு சம்பர்தாயமாக விழங்குகிறது ஆனால் ஒட்டு மொத்தமாக தமிழர்களின் கலாச்சாரம் தமிழர்கள் என அங்கே இருக்கு அனைத்தையும் அழித்துவிடுவோம் என்பதை தீர்க்கமாக சொல்கிறார் இயக்குனர்.
நம் இனத்தை அழித்த சிங்களவனை திருமணம் செய்து கொண்டோம் என்ற சிரிய உருத்தல் கூட இல்லாமல் அந்த பெண் அவருடன் மகிழ்ச்சியாக இருக்கிறாள். சில நாட்களுக்கு பிறகு அடகுகடைகாரரின் நண்பன் வருகிறார், அவர் மூலமாக அந்த பெண்ணிற்க்கு தெரியவருகிறது தான் ஒரு சிங்கள இராணுவத்தை சேர்ந்தவனை திருமணம் செய்து கொண்டோம் என்று அதன் பிறகு அவளை அதையே நினைத்து கொண்டிருக்கிறாள் அவளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்று தன் அடகு கடையை ஒரு இசுலாமியருக்கு விற்றுவிட்டு அவளை இந்தியாவிற்க்கு கூட்டிசென்று அவளுக்கு பிடித்த சேலை முதல் தமிழ்படங்கள் வரை அனைத்தையும் அனுபவி என்கிறான் அவள் அந்த குற்ற உணர்வோடு சம்மதிக்கிறாள் இருதியாக அவன் விமான டிக்கட் வாங்க போகும் சமையம் பார்த்து மேலிருந்து குதிது இறக்கிறாள் படம் முடிகிறது.

இயக்குனரிடம் எமது கேள்வி:
1.    



       1. மலையகத்தில் சிங்கள அரசாங்கம் தீவிரமாக இயங்கும் இடத்தில் எப்படி தமிழில் அதுவும் கந்தசஷ்டிகவசமும், மாரியம்மன் பாடல்களும் ஒலிக்கின்றன. சிங்கள அரசு புதிதாக சட்டம்போட்டுள்ளதா? 
     2..   அடகுகடைக்காரன் அடிக்கடி ஒன்றுமே பேசாமல் WWF மட்டும் பார்த்துக்கொண்டிருக்கிறான் ஏன் இச்சைக்கு மட்டும் முகத்தை மகிழ்வாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நினைப்பதை உறுதிபத்திருக்கிறாரா?.   
       
       3. யாழ்பாணத்தில் இருக்கும் தமிழ் பெண் எப்படி சரளமாக சிங்களம் பேசுகிறாள் 
4      4.   வேலை ஆள் கூட தமிழ் பெண்மனியாக வைத்திருக்கும் சிங்களன் தமிழர்களை நாங்கள் எப்போது அடிமைகளாக தான் வைத்திருப்போம் என்று சொல்கிறாரா இயக்குனர்

இறுதியாக 

ஒரு பார்வையாளர் கேட்ட கேள்விக்கு ஜெயபாலன் திமிராக பதில் சொல்லுகிறார் மலையகம் தான் உங்களுக்கு அதைப்பற்றி உங்களுக்கு தெரியுமா என்று திரு ஜெயபாலனை ஒரு கவிஞராக உருவாக தமிழக மக்கள் தான் காரணம் அதில் நீங்களும் நானும் கூட அடங்குவோம். அரங்கத்தில் சிறிது கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் அவரது மனைவி இப்படி கத்தி கத்தி தான் எங்களை அழித்துவிட்டீர்கள் என்றார். அன்று போர் நடந்து கொண்டிருந்த போது அவர்கள் அடைக்களம் தேடி இங்கு இந்த தமிழர்களை நாடி தான் வந்தார் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். அவரின் அருகாமையில் இருந்து கேட்டதால் இதை உங்களிடம் சொல்கிறேன் பிறகு இதை வெளியே சொல்லி சர்ச்சைக்கு கொண்டுவர நான் விரும்பவில்லை..