வர இருக்கும் கட்டுரை


குளிரூட்டப்பட்ட அறைக்குள் அமர்ந்து கணிப்பொறி உதவியுடன் வாழ்க்கைப்பயணத்தை தொடங்கிவிட்டேன் என்ற எண்ணம் எனக்குள்... ஒருமுறை நான் பனிபுரியும் அலுவலகத்தின் சன்னல் திரையை விளக்கிபார்த்த போது தான் தெரிந்தது... இன்னும் வறுமையின் கரங்களில் சிக்கித்தவிக்கும் மக்கள் வாழும், சாபம் நிறைந்த சமூகத்தில் தான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் என்று!!!

Friday 21 December 2012


”சதுரங்கம் விளையாடும் தபால்துறை ஊழியர்கள்”


                                      இந்திய அஞ்சல் துறை இது இந்திய அரசினால் செயல்படுத்தப்படும் அஞ்சல் சேவை ஆகும். பல வழிகளில் மக்களுக்குச் சேவை செய்து வருகிறது. உலகில் அதிகமான அஞ்சல் அலுவலகங்களைக் கொண்ட நாடு இந்தியா. இந்திய அஞ்சல்துறை மொத்தம் 154,000 அஞ்சல் அலுவலகங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய துறையாகும் இது  முதன்முதலாக 1764-1766களில் துவங்கப்பட்டது. இங்கு இந்திய அஞ்சல் துறையில் மொத்தம் 593,878 (தோராயமாக) ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். இந்திய அஞ்சல் துறை சிறிய வகை வங்கி சேவைகளிலும் ஈடுபடுகிறது. இதன் மூலம் வங்கி வசதி இல்லாத கிராமங்களும் பயன்பெறுகின்றன. மற்ற தனியார் நிருவனங்களை காட்டிளும் இங்கு மிகவும் குறைவான கட்டனம். இப்படிப்பட்ட ஒரு மிகப்பெரிய துறை இன்றும் மந்தமாகத்தான் இருக்கிறது.
                                காரணம் இங்கு பணிகள் சரியாக நடைபெறுவதில்லை எதற்கேடுத்தாழும் தாமதம் ஒரு சந்தேகம் கேட்டால் கூட திமிர்த்தனமாக பதில் கொடுத்தல். பணி நேரத்தில் தூங்குவது கைப்பேசியில் பேசுவது பொதுஜனத்தை முன்நிருத்திவிட்டு குடும்பக்கதைகளை பேசுவது சின்ன சின்ன கவர்களுக்கு கூட 4 விண்ணப்பங்கள் அவசரம் புரியாமல் தாமதப்படுத்துவது என ஏன் இங்கு வந்தோம் என்று நினைக்கவைத்துவிடுகிறது
                                      ஆனால்  கூரியர் நிறுவனங்கள் இந்தியாவிற்கு வந்து குறைந்த பட்சம் பத்து முதல் பதினைந்து வருடங்கள் தான் இருக்கும் ஆனால் இந்த நிறுவனங்களின் வளர்ச்சி அதிவேகமாக இருக்கிறது. உலக நாடுகலெங்கும் மிகவும் அதிக அளவில் இவை இயங்குகின்றன ஏனென்றால்!!!! முதலில் நாம் சொல்வது வீட்டிற்கே வந்து நிற்கும் இவர்களது சேவை தான். உள்நாட்டு உள் மாநிலத்திற்குள் தபால் அனுப்பவேண்டும் என்றால் ஒன்றும் தேவை இல்லை வெளிநாடுகளுக்கு தபால் அனுப்ப இவர்கள் கேட்பது ஏதேனும் ஒரு அடையால அட்டை நகல் தான்.
                   இந்தியாவில் இருந்து இலங்கைக்கு ஒரு நாளில் சென்றுவிடும் அதாவது இன்று பதிவு செய்தால் நாளை கிடைத்துவிடும் அதேபோல அமெரிக்க, ஜெர்மன்,லண்டன், போன்ற நாடுகளுக்கும் அதிகப்பட்சம் இரண்டு நாட்களில் கிடைத்து விடுகிறது. ஆனால் இதன் சேவை கட்டனம் மிகவும் அதிகம் ஒருகிலோவிற்கு சுமார் 300ல் துவங்கி 1100 வரை இருக்கிறது. இருப்பினும் இதை தான் மக்கள் தேர்வு செய்கின்றனர்.
        இது குறித்து பொதுஜனம் ஒருவர் கூறுகையில் : சார் நான் NRI இந்த திருவல்லிக்கேணி தபால் நிலையத்தில் ஓரு தபால் என் பெயருக்கு வந்துருக்கு அதை வாங்க நான் இரண்டு நாட்களா இங்க வந்துடு இருக்கேன் ஆனா இன்னும் தபால் கைக்கு வந்து சேரவில்லை எங்கு இருக்கு என தெரியவில்லை என்றார் முதல் நாள் இன்று அடையால அட்டை வேண்டும் எண்கிறார். எப்போது பார்த்தலும் கேரம்போர்டு விளையாட்டு தான் விளையாடுகின்றனர் சுதட்டம் போல் இது மட்டும் இல்ல சார் பிரான்ஸ்சில் இருந்து நன்பர் ஒருவர் கேமரா அனுப்பீருக்கார் அது இந்தியா வந்து 1மாதம் ஆகிறது ஆனால் இன்னும் கைக்கு வந்து சேரவில்லை விமானநிலைத்திற்கு அருகில் உள்ள சுங்கத்தபால் நிலைக்கு 5 முறை சென்றுவந்துள்ளேன் பாவித்த பொருலுக்கு பில்,ரசீது கேட்கிறார்கள் இதற்கு கூரியர் நிறுவனங்கள் தேவலாம் என்றார் வேதனையோடு.