வர இருக்கும் கட்டுரை


குளிரூட்டப்பட்ட அறைக்குள் அமர்ந்து கணிப்பொறி உதவியுடன் வாழ்க்கைப்பயணத்தை தொடங்கிவிட்டேன் என்ற எண்ணம் எனக்குள்... ஒருமுறை நான் பனிபுரியும் அலுவலகத்தின் சன்னல் திரையை விளக்கிபார்த்த போது தான் தெரிந்தது... இன்னும் வறுமையின் கரங்களில் சிக்கித்தவிக்கும் மக்கள் வாழும், சாபம் நிறைந்த சமூகத்தில் தான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் என்று!!!

Friday 27 June 2014

கட்டுரைகள்




எங்கள் வாழ்க்கையும் மீட்டர் தான்





ஆட்டோ ஓட்டுநர் என்றாலே நம் பார்வையிலும் மனதிலும் சட்டென்று உதிப்பது. அவர்கள் மக்களை ஏமாற்றுபவர்கள், அவர்கள் பொது மக்களிடம் அதிகமாக கட்டணம் வசூலிப்பவர்கள், ரொடித்தனங்களில் ஈடுபடுவர்கள், பொறுப்பில்லாமல் கண்டபடி வண்டி ஓட்டுபவர்கள் போன்ற குற்றச்சாட்டுகளை அனைவராலும் சுமத்தப்படும் ஒர் குற்றச்சாட்டு, அதற்காக ஆட்டோகாரர்கள் அனைவருமே நல்லவர்கள் என்று சொல்லவில்லை. பாதிக்கப்படும் மக்களில் பெரும்பாண்மையாக விரட்டப்படுவது இவர்கள் தான்
இவ்வளவு கஸ்டத்திலும் இவர்களை  புதிதாக விரட்டத்தொடங்கியிருக்கிறது தான் ஆட்டோமீட்டர் உன்மையாக சொல்லப்போனால் விலையேற்றத்தில் இருந்து பள்ளிக்கூடங்கள் வரை எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் யாரை பதிக்கிறதோ இல்லையோ நடுத்தரவர்க்கத்தினரை பாதிக்கும் அதிலும் ஆட்டோ ஓட்டுநர்கள் தான் இதில் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பது அரசியல்வாதிகள் முதல் காவல்துறையினர் வரை எல்லாருக்கும் தெரியும். இருந்தும் ஒவ்வொரு முறையும் ஓரங்கட்டப்படுவதும் இவர்கள் தான் இது ஒவ்வொரு முறையும் நாம் காணும் காட்சி இது போலியானால் நம் கண்கள் குறுடாக்கப்பட்டுள்ளன என்பது தான் உண்மை
ஒரு முறை சற்று யோசித்துப்பார்த்தாலும் ஒருதலைபட்சமான பார்வை என்று தோன்றும் ஆனால் இன்றைய நிலையில் 1 லிட்டர் பெட்ரோல் விலை 74ரூபாய்22 காசுகள் இது எப்போது உயரும் என்றே தெரியாத நிலையில் தேநீர் விலை 7-ரூ, 1 லிட்டர் அரசாங்க குடிநீர் தனியார் குடிநீர் 20க்கும் விற்பனை செய்துக்கொண்டிருக்கிறது. சரி இதையெல்லாம் பொருத்துக்கொண்டாலும் கூட மிஞ்சிப்போனால் ஆட்டோக்காரன் எவ்வளவு அதிகமாக சம்பாதித்துவிட முடியும் இந்த சென்னையில் ஏறக்குறைய 15,000 ஆட்டோக்கள் இருக்கும் அவர்கள் நாள் ஒன்றிற்க்கு 10 சவாரி போனால் 600 முதல் 700 வரை கிடைக்கும் அதிலும் தொலைதூரம் சென்றால் மட்டுமே 1000 ரூபாயை தொட முடியும். இதில் காவல்துறை மறித்தால் அவர்களுக்கு கையூட்டு, தினமும் வண்டி வாடகை, குடும்பசெலவு, வண்டி பாரமரிப்பு அவர் செலவு இருதியில் என்ன மிச்சம் கந்துவட்டிக்கு கடன் வாங்குவது தான். இது போக கந்துவட்டியிலும் எஞ்சிய தொகையில் தான் குடும்பத்தை பார்க்க முடியும். இவ்வளவு நெருக்கடிக்கு மத்தியிலும் வேறுதொழில் தெரியாத இவர்களின் நிலை கேள்விக்குறி தான் வருடம் முழுவதும் அரசு அலுவலகங்களுக்கோ, காவல் நிலையங்களுக்கோ மக்கள் பொருத்தமான துணை இன்றி போக அஞ்சும் சூழ்நிலையில் தமது செல்ல பிள்ளைகளையும், வயது வந்த பெண்களையும் ஆண்டு முழுவதும், பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் ஆட்டோ டிரைவர்களை நம்பி அனுப்பி வைக்கின்றனர் என்பதும் மக்கள் சொந்த கோரிக்கைகளுக்காக மட்டும் அல்லாமல் சமூக அக்கறையுடனும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கான கட்டணத்தை அரசு தீர்மானிக்கும் போது கோடிக்கணக்கான மக்களின் அத்தியாவசிய பெட்ரோல் டீசல் விலையை தனியார் முதலாளிகள் தீர்மானிக்க மத்திய அரசு அனுமதிக்கிறது இதனை கண்டிக்க ஒருவரும் இல்லை.
ஆட்டோக்கான கட்டணத்தை தீர்மானித்து அதனை கண்காணிக்கவும் அதிகாரிகளை நியமிப்பதும் பல பகுதிகளில் நடந்துவருகிறது ஆனால் இவ்வளவும் செய்யும் அரசே 1 லிட்டர் பெட்ரோல் மீது கலால்வரி, சேவைவரி, விற்பனைவரி, மாநிலவரி உள்ளிட்ட மறைமுக பல்வேறு வரிமூலம் ரூ 50 வரை வரிபோட்டு சுரண்டுவதை  கேட்க யாரேனும் உண்டா. ஏன் தமிழக அரசு இந்த வரிகளை ரத்து செய்து மக்களுக்கு அத்தியாவசியமான இந்த எரி பொருள் விலையை குறைக்க முன்வரவில்லை. பெட்ரோல், டீசல் விலை அவ்வப்போது தன் இஸ்டத்திற்க்கு ஏற்றுகின்றன அதை கேட்காத அரசு ஏன் ஆட்டோ ஓட்டுனர் 50 ரூபாய் சேர்த்து கேட்டால் அதற்க்கு நடவடிக்கை எடுக்க முன் நிற்க்கிறது. எரி பொருள் விலை உயரும் போது மீட்டர் விலையையும் ஏற்றுவதற்க்கு ஒப்புக்கொள்ளுமா இந்த அரசு.
மக்களை ஏமாற்றி கொள்ளை அடிக்கும் அரசியலவாதிகள், அரசை ஏமாற்றி கொள்ளையடிக்கும் தொழில் அதிபர்கள், தனியார் முதலாளிகள் என அனைவரையும் விட்டு விட்டு 5க்கும் 10க்கும் சிரமப்படும் மக்களிடம் தன் வீரத்தை காட்டுகிறதா அரசு
ஒரு சாதாரன ஆட்டோ ஓட்டுனர் மக்களை ஏமாற்றி சொந்த வீடு வாங்கிவிட்டாரா அல்லது பெரிய கட்சி துவங்கிவிட்டாரா இன்னும் அதே காக்கி சட்டையுடன் வேகாத வெயிலில் வயித்துக்கும், குடும்பத்திற்க்குமாக உழைத்துக்கொண்டிருக்கும் இவர்களை அடிப்பதன் காரணம் தான் என்ன? காலை, மாலை, இரவு என அழைந்து திரிந்து வீட்டிற்க்கு வரும் இவர்கள் பெற்ற பிள்ளைகளை பார்த்து அவர்களுடன் நேரம் ஒதுக்ககூட முடியாமல் எந்த நேரத்திலும் கஷ்டத்தின் பிடியிலேயே வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர்.

இதற்காக 100 ரூபாய் சேர்த்து வாங்குவது தப்பில்லை என்று சொல்லவில்லை, அதுவும் மக்களின் தலையில் தான் விடிகிறது ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படுவது நடுத்தரமக்கள் தான் என்பதை சிந்திக்க வேண்டும் ஒருவர் பாதிப்பில் மற்றொருவர் ஆதாயம் அடையாமல் அனைவருக்கும் பாரபட்சமின்றி செயல்பட மறுக்கும் இந்த சனநாயகத்தை என்ன வென்று சொல்வது.

ஒருபுறமிருக்க செய்தி ஊடகங்கள் அதிகாரிகளைப்பற்றியும் அவர்கள் செய்யும் தவறுகளைப்பற்றியும ஒளிபரப்புவதும் இல்லை மாறாக நடுநிலை,உண்மை, என சொல்லிக்கொண்டு உன்மையை மறைத்து தான் செயல்படுகிறது , இது பற்றாக்குறைக்கு அலைக்கற்றை ஊழல், தாதுமணல் கொள்ளை என பல லட்சம் கோடி கொள்ளையடித்தவர்களை வெளிப்படையாகவே உல்லாச வாழ்க்கை அனுபவிக்கின்றனர். இந்த குற்றவாளிகள் ஒரு போது இதுவரை தடுக்கவோ, தண்டிக்கவோ இல்லை. இவர்களின் கொள்ளை அதிகாரப்பூர்வமாகவே நடக்கிறது அதை கண்கொண்டுக்கொள்வதை தவிர்க்கிறது ஊடகம்.

இது ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மட்டும் அல்ல அனைத்து உழைக்கும் மக்களின் வாழ்வை எந்த வகையில் சீரழிக்கலாம் என்று காத்துக்கொண்டிருப்பது போலவும் நடுத்தரவர்க்க மக்களின் வாழ்வாதாங்களை நசுக்குகின்றன. இந்த அரசாங்கமும் பணக்கார வர்க்கமும் இவர்களை தகர்க்க வழியே இல்லையா?...

No comments:

Post a Comment